Tuesday 2 January 2018

16. கல்வியும் பயிற்சியும் – மா சே துங்

நமது கல்விக் கொள்கை கல்வி பெறும் ஒவ்வொருவரையும் ஒழுக்கத்திலும் அறிவிலும் உடல் நலத்திலும் வளர்ச்சி அடையவும், சோஷலிச உணர்வும் பண்பாடும் உடைய தொழிலாளியாக ஆகவும் துணை செய்ய வேண்டும்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாக
 கையாள்வது பற்றி -27 பிப்ரவரி 1957)


ஊழியர்களின் கல்வியைப் பொறுத்தவரை, வேலையில் ஆயினும் சரி, ஊழியர்களுக்கான பள்ளிகளில் ஆயினும் சரி, சீனப் புரட்சியின் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராய்வதை மையமாக வைத்து, மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வழிகாட்டியாக பயன்படுத்தும் கொள்கை நிறுவப்பட வேண்டும். மார்க்சிய லெனினியத்தை நிலையியலாகவும் தனிமைப்படுத்தியும் கற்கும் முறை புறக்கணிக்கப்பட வேண்டும்.
(நமது படிப்பைச் சீர்செய்வோம் – மே 1941)

படைகளைப் பயிற்றுவிப்பதில் நமது முழக்கம், “அதிகாரிகள் படைவீரர்களுக்கு கற்பிப்பது, படைவீரர்கள் அதிகாரிகளுக்கு கற்பிப்பது, படைவீரர்கள் ஒருவருக்கொருவர் கற்பித்துக் கொள்வது” என்பதாகும். போராளிகளுக்கு பெருமளவு நடைமுறைப் போர் அனுபவம் உண்டு. அதிகாரிகள் போராளிகளிடமிருந்து கற்க வேண்டும்.  பிறருடைய அனுபவத்தை தமதாக்கிக் கொண்டால் அவர்கள் மேலும் திறமையுடையவர்கள் ஆவர்.
(ஷ்ன்சி-சய்யுவன் நாளேட்டின் ஆசிரியர் குழுவுடன்
நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1848)


No comments:

Post a Comment