Thursday 20 June 2019

கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டம் பற்றி - லெனின்


மார்க்ஸ் தொடர்ந்து கூறுகிறார்:
''... கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில், தனி நபரை உழைப்புப் பிரிவினைக்குக் கீழ்ப்படுத்தி அடிமைத் தளையிடுவதும் அதனுடன் கூட மூளை உழைப் புக்கும் உடலுழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைந்த பின், உழைப்பானது பிழைப்புக்கான சாதன மாய் மட்டுமின்றி வாழ்வின் முதற்பெரும் தேவையுமாகியபின், தனி நபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடு கூட உற்பத்தி சக்திகளும் அதிகரித்துவிட்டபின், பொதுச் சமுதாயச் செல்வத்தின் அருவிகள் எல்லாம் மேலும் அபரிமிதமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகையில்-- அப்பொ ழுது தான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்பட்டு, சமுதாயம் தன் பதாகை களில் 'ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்ற லுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவை களுக்கு ஏற்ப ' என்பதாய்ப் பொறித்துக் கொள்ளும்!''

''சுதந்திரம்'', ''அரசு' இவ்விரு சொற்களையும் இணைத்து முடி போடுவதிலுள்ள அபத்தத்தை எள்ளி நகையாடும் எங் கெல்சின் உரைகள் எவ்வளவு சரியானவை என்பதை இப் பொழுது தான் நம்மால் முழு அளவுக்கு உணர முடிகிறது. அரசு இருக்கும் வரை சுதந்திரம் இல்லை. சுதந்திரம் வந்த தும் அரசு இல்லாமற் போய்விடும்.

அரசு பூரணமாய் உலர்ந்து உதிர்வதற்கு அடிப்படை யாய் அமைவது கம்யூனிசத்தின் மிக உயர்ந்த வளர்ச்சிக் கட்டமாகும். இக்கட்டத்தில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்குமுள்ள எதிர்நிலை மறைந்துவிடுகிறது; தற்காலச் சமுதாய சமத்துவமின்மைக்குத் தலைமையான ஆதாரங்களில் ஒன்று இவ்வாறு இக்கட்டத்தில் மறைந்துவிடுகிறது. உற் பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமையாய் மாற்றுவதால் மட்டும், முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்வதால் மட்டும் உடனடியாக எவ்வகையிலும் இந்தத் தலைமையான ஆதாரத்தை அகற்றிவிட முடியாது.

முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய் வதானது உற்பத்தி சக்திகள் பிரம்மாண்டமாய் வளர்ச்சியுறு வதைச் சாத்தியமாக்குகிறது. முதலாளித்துவம் ஏற்கெனவே எவ்வளவு நம்பமுடியாத அளவுக்கு இந்த வளர்ச்சியைத் தடுத்து இழுக்கிறதென்பதைக் காணும்போது, ஏற்கெனவே கை வரப்பெற்றுள்ள தொழில் நுட்ப நிலையின் அடிப்படையில் எவ்வளவு அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமென் பதைக் காணும்போது, முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்வதன் விளைவாய் மனிதச் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் தவிர்க்கமுடியாதவாறு பிரம்மாண்டமாய் வளர்ச்சியடையுமென நாம் திட நம்பிக்கையோடு கூற முடியும். ஆனால் இந்த வளர்ச்சி எவ்வளவு துரிதமாய் நடந்தே றும் என்று, உழைப்புப் பிரிவினையிலிருந்து முறித்துக் கொண்டு வருவதும், மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்குமுள்ள எதிர் நிலை ஒழிக்கப்படுவதும், உழைப்பானது வாழ்க்கை யின் முதற் பெரும் தேவையாவதும் எவ்வளவு சடுதியில் நடைபெறும் என்று நாம் அறியோம் , அறியவும் முடியாது.

ஆகவே தான் நாம் தவிர்க்க முடியாதபடி அரசு உலர்ந்து உதிர்வது குறித்து மட்டும் பேசி, இந்த நிகழ்ச்சிப்போக்கு நீடித்து நடைபெறும் தன்மை கொண்டதாய் இருப்பதையும் கம்யூனிசத்தின் உயர் கட்டம் வளர்ச்சியுறுவதன் வேகத் தைச் சார்ந்ததாய் இருப்பதையும் வலியுறுத்திவிட்டு, அரசு உலர்ந்து உதிரத் தேவையான காலத்தையோ அதன் ஸ்தூல மான வடிவங்களையோ பற்றிய பிரச்சினைக்கு விடை கூறாது விட்டு வைக்க உரிமை பெற்றிருக்கிறோம். ஏனெனில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க விவரப்பொருள் இல்லை.

'ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைகளுக்கு ஏற்ப என்னும் விதியைச் சமுதாயம் அனுசரிக்கையில் தான், அதா வது மக்கள் தாமே மனமுவந்து தமது ஆற்றலுக்கு ஏற்ப வேலை செய்யும்படி சமுதாய ஒட்டுறவுக்கான அடிப்படை நியதிகளைப் பற்றியொழுக அந்த அளவுக்குப் பழகிக்கொண்டு விடும்போதும், அவர்களுடைய உழைப்பு அந்த அளவுக்குப் பொருளுற்பத்தி ஆற்றல் மிக்கதாகிவிடும் போதும் தான் அரசு பூரணமாய் உலர்ந்து உதிர முடியும். வேறொருவரைவிட நாம் அரை மணி நேரம் அதிகம் வேலை செய்யவில்லையா, வெறொருவரைவிட நாம் குறைவாய் சம்பளம் பெறவில்லையா என்று ஷைலாக்கின்5 கல்நெஞ்சுடன் கணக்கிட்டுப் பார்க்கும் படி நிர்ப்பந்தம் செய்யும் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு" அப்பொழுது கடக்கப்பட்டுவிடும். அப் பொழுது சமுதாயம் உற்பத்திப் பொருட்களை வினியோகிக் கையில் அவரவரும் பெற வேண்டிய அளவை ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை இருக்காது; ஒவ்வொருவரும் ''தமது தேவைகளுக்கு ஏற்பத் தடங்கலின்றி சுதந்திர மாய் எடுத்துக் கொள்வார்.

முதலாளித்துவக் கண்ணோட்டத்திலிருந்து, இத்தகைய ஒரு சமுதாய அமைப்பு ''வெறும் ஆகாயக் கோட்டையே" என்று அறிவிப்பதும், அந்தந்தக் குடிமகனின் உழைப்புமீது எந்தக் கண்காணிப்புமின்றி அவரவரும் சமுதாயத்திடமிருந்து வேண்டிய அளவு மிட்டாயும் கார்களும் பியானோக்களும் பிறவும் பெறும் உரிமையை ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வதாய் வாக்களிப்பதாக சோஷலிஸ்டுகளை நையாண்டி செய்வதும் சுலபமே. இன்றுங்கூட மிகப் பெருவாரியான முதலாளித்துவ விஞ்ஞானிகள்'' இவ்வாறு நையாண்டி செய்வதோடு நின்றுவிடுகிறார்கள். இதன் மூலம் தமது அறியாமையையும், தன்னலங் கருதி முதலாளித்துவத்தைப் பாதுகாக்க முனைவோரே தாம் என்பதையும் தான் வெளிப் படுத்திக் கொள்கிறார்கள்.

அறியாமைதான் - ஏனென்றால், கம்யூனிச வளர்ச்சியின் உயர் கட்டம் வருமென வாக்குறுதி தரும் எண்ணம் எந்த சோஷலிஸ்டுக்கும் தோன்றியதில்லை. இது வரவே செய்யுமென்று சோஷலிஸ்டு மூலவர்கள் முன்னறிந்து கூறி யதைப் பொறுத்த வரை, அது உழைப்பின் தற்போதைய உற்பத்தித் திறனையோ, பொமியலோவ்ஸ்கியின் கதைகளில் வரும் புர்சாக்கியைப் போல வேடிக்கைக்காக வேண்டி பொதுச் செல்வங்களுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவர் களும், முடியாததைக் கொடு என்று கோரக் கூடியவர்களு மான தற்போதுள்ள சராசரி மனிதர்களையோ மனதிற் கொண்டு கூறப்பட்டதல்ல.

கம்யூனிசத்தின் 'உயர்'' கட்டம் வரும்வரை, உழைப் பின் அளவை மீதும் நுகர்வின் அளவை மீதும் சமுதாயமும் அரசும் மிகவும் கண்டிப்பான கண்காணிப்பு செய்ய வேண்டும் மென்று சோஷலிஸ்டுகள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கண்காணிப்பு முதலாளிகளுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதிலிருந்தும் முதலாளிகள் மீது தொழிலாளர் களுடைய கண்காணிப்பு நிறுவப்படுவதிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். தவிரவும் இந்தக் கண்காணிப்பு அதிகாரவர்க் கத்தினராலான அரசால் அல்ல, ஆயுதமேந்திய தொழிலாளர் களாலான அரசால் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர்.

முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் மற்றும் தெஸெரெத் தேலிகள், செர்னோவ்கள் முதலானோரை ஒத்த முதலாளித் துவ சித்தாந்தவாதிகளது பரிவாரத்தினரும்) தன்னலங் கருதி முதலாளித்துவத்தைப் பாதுகாப்பது எதில் காணக்கிடக்கிறது என்றால், இன்றைய அரசியலின் ஜீவாதாரமான அவசர அவ சியப் பிரச்சினையை விட்டுவிட்டு, அதாவது முதலாளிகளுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தல், குடிமக்கள் எல்லோரையும் பிரம்மாண்டமான ஒரே 'கூட்டமைவின்' அனைத்து அரசின் தொழிலாளர்களாகவும் சிப்பந்திகளாகவும் மாற்றுதல், இந்தக் கூட்டமைவின் செயல் அனைத்தை யும் மெய்யான ஜனநாயக அரசுக்கு, தொழிலாளர், படையாட் கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் அரசுக்கு முற்றிலும் கீழ்ப் படியச் செய்தல் ஆகியவற்றை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாய் நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்தைப் பற்றிய வாக்குவாதத்தையும் பேச்சையும் மேற்கொள்கிறார்கள்.

புலமைவாய்ந்த பேராசிரியரும், அவரைத் தொடர்ந்து குட்டி முதலாளித்துவ அற்பவாதியும், இவரையும் தொடர்ந்து தெஸெரெத்தேலிகளும் செர்னோவ்களும் போல்ஷிவிக்கு களின் அதீத கற்பனைகள் என்றும், வாய்ச்சவடால் வாக்குறுதி கள் என்றும், சோஷலிசத்தைப் புகுத்துவது சாத்திய மல்ல என்றும் பேசுகையில், இவர்கள் கம்யூனிசத்தின் உயர் கட்டம் அல்லது படியை மனதிற் கொண்டிருக்கிறார் கள். இதனைப் புகுத்துவதாய்'' யாரும் ஒரு நாளும் வாக்குறுதி கூறவுமில்லை, நினைத்ததுங்கூட இல்லை; இது 'புகுத்தப் படக் கூடியது அல்ல.

இது நம்மை சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்குமுள்ள விஞ்ஞான வழியிலான வேறுபாடு குறித்த பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. “சமூக - ஜனநாயகவாதி'' என்னும் பெயர் சரியல்ல என்பது குறித்து மேலே குறிக்கப்பட்ட தமது வாதத்தில் எங்கெல்ஸ் இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். கம்யூனிசத்தின் முதல் அல்லது கீழ்க் கட்டத்துக்கும் உயர் கட்டத்துக்குமுள்ள வேறுபாடு அரசியல் வழியில் காலப் போக்கில் மிகப் பெரியதாய் இருக்கும் எனலாம். ஆனால் இவ்வேறுபாட்டை இப்பொழுது முதலாளித்துவத்தில் இருக் கையில் கண்டறிய முற்படுவது நகைக்கத்தக்கதே ஆகும். தனிப்பட்ட அராஜகவாதிகள் மட்டும் வேண்டுமானால் (கிரப்போத்கின்களும் கிராவெயும் கார்னெலிசனும் அராஜகவாதத் தின் ஏனைய தாரகைகளும் '' சமூக - தேசிய வெறியர்களாக வும், இன்னமும் கண்ய உணர்வையும் மனசாட்சியையும் விட்டுவிடாதுள்ள ஒரு சில அராஜகவாதிகளில் ஒருவரான கே குறிப்பிட்டது போல -'அராஜகவாத-அகழாளர்களாகவும்', 'பிளெஹானவின் பாணியில் மாற்றமடைந்திருப் பதிலிருந்து எதுவும் அறிந்து கொள்ளாதோர் அராஜகவாதி களிடையே இன்னமும் இருப்பார்களாயின்) இதற்குத் தலைமை முக்கியத்துவம் அளிக்கக்கூடும்.

ஆனால் சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்குமுள்ள விஞ் ஞான வழியிலான வேறுபாடு தெட்டத் தெளிவானது. வழக்க மாய் சோஷலிசம் என்று அழைக்கப்படுவதை மார்க்ஸ் கம் யூனிச சமுதாயத்தின் முதல் அல்லது கீழ்க் கட்டம் என்று குறிப்பிட்டார். உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமை ஆகிவிடும் அளவுக்கு இக்கட்டத்துக்கும் 'கம்யூனிசம்'' என்னும் சொல் பொருந்துவதாகும், ஆனால் இது முழு நிறைக் கம்யூனிசம் அல்ல என்பதை நாம் மறக்காதிருக்க வேண்டும். மார்க்சின் விளக்கங்களுக்குள்ள மாபெரும் முக் கியத்துவம் என்னவெனில் இங்கும் அவர் பொருள்முதல்வாத இயக்கவியலை, வளர்ச்சித் தத்துவத்தை முரணின்றிக் கையாளுகிறார்; கம்யூனிசத்தை முதலாளித்துவத்தில் இருந்து வளர்ச்சியுறும் ஒன்றாகக் கருதுகிறார். பண்டிதப் புலமை சார்ந்த வழியில் கண்டுபிடிக்கப்பட்ட', புனையப்பட்ட இலக்கணங்களுக்கும் சொற்களைப் பற்றிய பயனற்ற சண்டப் பிரசண்டங்களுக்கும் (எது சோஷலிசம்? எது கம்யூனிசம்?) பதிலாய், மார்க்ஸ் கம்யூனிசத்தின் பொருளாதார முதிர்ச்சி யினுடைய இரு கட்டங்கள் எனப்படத்தக்கவற்றின் பகுத் தாய்வை அளிக்கிறார்.

முதற் கட்டத்தில் அல்லது படியில் கம்யூனிசமானது பொருளாதார வழியில் இன்னமும் முழு அளவு முதிர்ச்சியுற்றதாக, முதலாளித்துவத்தின் மரபுகள் அல்லது மிச்ச சொச்சங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக இருக்க முடியாது. ஆகவே கம்யூனிசம் அதன் முதற் கட்டத்தில் ''முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பை விட்டொழிக் காமல் வைத்துக் கொள்ளும் சுவாரஸ்யமான நிகழ்வு ஏற்படு கிறது. நுகர் பொருட்களின் வினியோகம் குறித்த இந்த முதலாளித்துவ உரிமைக்கு முதலாளித்துவ அரசு இருப்பது தவிர்க்க முடியாத முன்னிபந்தனையாகும், ஏனெனில் உரிமைக் குரிய தராதரங்கள் அனுசரிக்கப்படுமாறு உறுதிப்படுத்த வல்ல இயந்திரம் இல்லையேல் உரிமை அர்த்தமற்றதாகிவிடும்.

இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், கம்யூனிசத் தில் சில காலத்துக்கு முதலாளித்துவ உரிமை மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கம் இல்லாத முதலாளித்துவ அரசுங் கூட இருக்கும்!

இது முரணுரை போலத் தோன்றலாம், அல்லது மார்க் சியத்தின் அதியற்புத உள்ளடக்கச் சாரத்தை ஆய்ந்தறிய கிஞ்சித்தும் முயலாதோர் அடிக்கடி மார்க்சியத்தின் மீது குறை கூறுகிறார்களே அத்தகைய இயக்கவியல் புதிராகவுங்
கூடத் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்னவெனில், இயற்கையிலும் சமு தாயத்திலும் பழைமையின் மிச்சசொச்சங்கள் புதுமையில் எஞ்சி நின்று வாழ்க்கையில் நம்மை ஒவ்வொரு தப்படியிலும் எதிர்நோக்குகின்றன. தான்தோன்றித்தனமாய்க் கம்யூனிசத் தில் முதலாளித்துவ உரிமையைக் கடுகளவும் மார்க்ஸ் புகுத்திவிடவில்லை. முதலாளித்துவத்தின் அடிவயிற்றிலிருந்து வெளித்தோன்றும் ஒரு சமுதாயத்தில் பொருளாதார வழி யிலும் அரசியல் வழியிலும் தவிர்க்கமுடியாததைத்தான் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளி வர்க்கத்துக்கு, தனது விடுதலைக்காக அது முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில், ஜன நாயகம் அளவு கடந்த முக்கியத்துவமுடையதாகும். ஆயினும் ஜன நாயகம் தாண்டிச் செல்லக்கூடாத ஓர் எல்லைக் கோடல்ல. பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கும் செல்லும் பாதையில் அமைந்த கட்டங்களில் ஒன்றே அது.  

ஜனநாயகம் சமத்துவத்தைக் குறிக்கிறது. சமத்துவம் என்றால் வர்க்கங்கள் ஒழிக்கப்படுதல் என்று பிழையற்ற முறையில் அர்த்தப்படுத்திக் கொள்வோமாயின், பாட்டாளி வர்க்கம் சமத்துவத்துக்காக நடத்தும் போராட்டத்தின் மாபெரும் முக்கியத்துவமும், ஒரு முழக்கம் என்ற முறையில் சமத்துவத்தின் மாபெரும் முக்கியத்துவமும் தெளிவாய் விளங்கும். ஆனால் ஜனநாயகம் பெயரளவிலான சமத்து வத்தையே குறிக்கிறது. சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தமாய் சமத்துவம் சாதிக்கப் பெற்றதும், அதாவது உழைப்புக்கும் சம்பளங்களுக்குமான சமத்துவம் சாதிக்கப் பெற்றதும், மேலும் தொடர்ந்து முன்னேறுவது எப்படி, பெயரளவிலான சமத்துவத்திலிருந்து நடைமுறை உண்மையான சமத்துவத் துக்கு, அதாவது ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவை களுக்கு ஏற்ப ' என்னும் விதி செயல்படும் நிலைக்கு முன்னேறு வது எப்படி என்கிற பிரச்சினை தவிர்க்கமுடியாதபடி மனித குலத்தை எதிர்நோக்கும். எந்தக் கட்டங்களின் வாயிலாய், எந்த நடைமுறை நடவடிக்கைகளைக் கொண்டு மனிதகுலம் இந்தத் தலைமையான குறிக்கோளைச் சென்றடையும் என் பதை நாம் அறியோம், அறியவும் முடியாது. ஆனால் சோஷ லிசத்தை உயிரற்ற, இறுகிக் கெட்டியாகிய, என்றென்றுக்கு மாய் மாறாத ஒரே நிலையில் இருத்தப்பட்ட ஒன்றாய்க் கொள் ளும் சாதாரண முதலாளித்துவக் கருத்தோட்டம் நம்ப முடி யாத அளவுக்கு பொய்யானது என்பதையும், உண்மையில் சோஷலிசத்தில் மட்டும்தான் பொது வாழ்வு, தனியார் வாழ்வு இவற்றின் எல்லாத் துறைகளிலுமே மிக வேகமான, மெய்யான, உண்மையிலேயே பிரம்மாண்டத் திரளானோ ரைக் கொண்ட, முதலில் பெரும்பான்மையோரையும் பிறகு மக்கள் தொகை அனைவரையுமே கொண்ட, முன்னேற்றப் பேரியக்கம் தொடங்கும் என்பதையும் உணர்ந்து கொள்வது மிக முக்கியமாகும்.

ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவமாகும், அரசு வகைகளில் ஒன்றாகும். எனவே ஒவ்வொரு அரசையும் போல ஜன நாயகமும் ஒரு புறத்தில் ஆட்களுக்கு எதிராய் ஒழுங்க மைந்த, முறையான வன்முறைப் பிரயோகத்தைக் குறிக் கிறது. ஆனால் அது மறுபுறத்தில் குடிமக்களின் சமத்துவம், அதாவது அரசின் கட்டமைப்பை நிர்ணயிப்பதிலும் அரசை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் சம உரிமை உண்டென் பது பெயரளவில் அங்கீகரிக்கப்படுவதையும் குறிக்கிறது. இதன் விளைவு என்னவெனில், ஜன நாயகம் அதன் வளர்ச்சி யில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், முதலாளித்துவத்தை எதிர்த்துப் புரட்சிகரப் போராட்டம் நடத்தும் வர்க்கமான பாட் டாளி வர்க்கத்தை ஒன்றுதிரளச் செய்கிறது; முதலாளித்துவ அரசுப் பொறியமைவையும் குடியரசு வடிவிலான முதலா ளித்துவ அரசுப் பொறியமைவையும்கூட - நிரந்தரச் சேனை யையும், போலீசையும், அதிகாரவர்க்கத்தையும் இந்தப் பாட்டாளி வர்க்கம் தகர்த்துத் தவிடுபொடியாக்கி புவிப் பரப்பிலிருந்தே துடைத்தெடுத்துவிட்டு, இவற்றுக்குப் பதி லாய் மேலும் ஜன நாயக மான ஓர் அரசுப் பொறியமைவை அமைக்கக் கூடியதாக்குகிறது. முன்னிலும் அதிக ஜன நாயக முடைத்த அரசுப் பொறியமைவு என்றாலுங்கூட இதுவும் ஓர் அரசுப் பொறியமைவுதான். அனைத்து மக்களும் அடங் கிய காவலர் படையை நிறுவ முற்படும் ஆயுதமேந்திய தொழிலாளர்களின் வடிவில் அமைந்த அரசுப் பொறி யமைவு இது.

இங்கு “அளவு பண்பாய் மாறுகிறது'' : ஜன நாயகம் இந்த அளவுக்கு அதிகரிப்பதானது முதலாளித்துவ சமுதாயத் தின் வரம்புகளைத் தாண்டிச் சென்று இச்சமுதாயத்தை சோஷலிச வழியில் திருத்தியமைப்பதன் துவக்கத்தைக் குறிக்கிறது. மெய்யாகவே எல்லோரும் அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வார்களாயின் முதலாளித்துவத்தால் தன் பிடியை இருத்திக் கொள்ள முடியாது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிதான் மெய்யாகவே எல்லோரும் அரசு நிர்வா கத்தில் பங்கு கொள்ளும்படி வகை செய்யும் முன்னிபந்தனை களைத் தோற்றுவிக்கிறது. இந்த முன்னிபந்தனைகளில் சில வருமாறு: அனைத்து மக்களும் எழுத்தறிவு பெறுதல், மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் ஏற் கனவே இது சாதிக்கப் பெற்றுவிட்டது; தபால் துறை, ரயில் வேக்கள், பெரிய ஆலைகள், பெருவீத வாணிபம், வங்கித் துறை, இன்ன பிறவற்றாலான சிக்கல் மிக்க, பிரம்மாண்ட மான, சமூகமயமான இயந்திரத்தால் கோடானு கோடியான தொழிலாளர்கள் “பயிற்சியும் கட்டுப்பாடும்'' உடையோராக்கப்படுதல்.

இந்தப் பொருளாதார முன்னிபந்தனைகள் இருக்குமா யின், முதலாளிகளும் அதிகாரவர்க்கத்தினரும் வீழ்த்தப்பட்டபின், இவர்களுக்குப் பதிலாய் உற்பத்தியையும் வினியோ கத்தையும் கண்காணிப்பதிலும், உழைப்பையும் உற்பத்திப் பொருட்களையும் பற்றிய கணக்குப் பதிவு வேலையிலும் உடனடி யாகவே, எடுத்த யெடுப்பிலே, ஆயுதமேந்திய தொழிலாளர் களையும், ஆயுதமேந்திய மக்கள் அனைவரையுமே ஈடுபடுத்து வது முற்றிலும் சாத்தியமே. (கண்காணிப்பும் கணக்குப் பதிவுமான இந்தப் பிரச்சினையைப் பொறியாளர்கள், விவசாய நிபுணர்கள் முதலான விஞ்ஞானப் பயிற்சி பெற்ற ஊழியர்களைப்பற்றிய பிரச்சினையுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்தக் கனவான்கள் இன்று முதலாளி களுடைய விருப்பங்களுக்குப் பணிந்து வேலை செய்கிறார்கள், நாளைக்கு ஆயுதமேந்திய தொழிலாளர்களுடைய விருப்பங் களுக்குப் பணிந்து இன்னுங்கூட திறம்பட வேலை செய்வார்கள்.)

கணக்கீடு, கண்காணிப்பு - கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டம் தடங்கலின்றி இயங்கவும் சரிவரச் செயற்படவும் பிர தானமாய்த் தேவைப்படுகிறவை இவையே. குடிமக்கள் எல் லோரும் அரசின் சம்பளச் சிப்பந்திகளாய் மாற்றப்பட்டுவிடு கிறார்கள்; அரசு ஆயுதமேந்திய தொழிலாளர்களால் ஆனது. குடிமக்கள் எல்லோரும் அரசினுடைய நாடு தழுவிய ஒரே யொரு ''கூட்டமைவின் சிப்பந்திகளும் தொழிலாளர்களும் ஆகிவிடுகிறார்கள். தேவைப்படுவது எல்லாம் இவர்கள் சமத்துவமாய் வேலை செய்ய வேண்டும், வேலையில் தமக்கு உரிய பங்கைச் செய்து சமத்துவ சம்பளம் பெற வேண்டும் என்பதே. இதற்கு வேண்டிய கணக்கீடும் கண்காணிப்பும் முதலாளித்துவத்தால் வெகுவாய் எளினமப்படுத்தப்பட்டு, எழுத்தறிவுடையவர் எவரும் செய்ய முடியும்படி யான மேற்பார்வையிடல், பதிவு செய்தல், எண் கணிதத்தின் அடிப்படை விதிகளை அறிந்திருத்தல், தக்க ரசீதுகளை எழுதிக் கொடுத்தல் போன்ற மிகமிக எளிய வேலைகளாய்க் குறுகும் படிச் செய்யப்பட்டுவிட்டன.

மக்களில் பெரும்பான்மையோர் தாமே சுயேச்சையாக வும் எல்லாவிடத்தும் இத்தகைய கணக்குப் பதிவுகளைச் செய்யவும், (இப்பொழுது சிப்பந்திகளாய் மாற்றப்பட்டு விட்ட) முதலாளிகளையும் தமது முதலாளித்துவப் பழக்கங் களை விடாது வைத்துள்ள அறிவுத் துறைக் கனவான்களையும் இவ்விதம் கண்காணித்துக் கொள்ளவும் தொடங்குகையில், இந்தக் கண்காணிப்பு மெய்யாகவே சர்வவியாபகமானதாக வும் பொதுவானதாகவும் வெகுஜனத்தன்மையதாகவும் ஆகி விடும், இதிலிருந்து தப்ப வழி இருக்காது, ஏனெனில் போக் கிடம் எதுவும் இருக்காது.

சமுதாயம் முழுதும் சமமான உழைப்புக்குச் சமமான சம்பளத்துடன் ஒரே அலுவலகமும், ஒரே ஆலையுமாகிவிடும்.

ஆனால் பாட்டாளி வர்க்கம் முதலாளிகளைத் தோற்கடித்த பிற்பாடும், சுரண்டலாளர்களை வீழ்த்திய பிற்பாடும் சமுதா யம் முழுவதுக்கும் விரிவடையச் செய்யும் இந்த 'ஆலைத் துறைக் கட்டுப்பாடு எவ்வகையிலும் நமது இலட்சியமோ, நமது இறுதிக் குறிக்கோளோ அல்ல. முதலாளித்துவச் சுரண்டலால் விளைந்த எல்லா இழுக்குகளையும் அசிங்கங்களை யும் களைந்து சமுதாயத்தைச் சுத்தம் செய்து தூய்மையாக்கு வதற்கும், மேலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கும் இது அவசியமான ஒரு படியே அன்றி வேறல்ல.

எத்தருணம் முதல் சமுதாயத்தின் எல்லா உறுப்பினர் களும் -- அல்லது குறைந்தது மிகப் பெரும்பான்மையோர் – அரசைத் தாமே நிர்வகிக்கக் கற்றுக் கொள்கிறார்களோ, இந்தப் பணியை நேரில் தாமே மேற்கொள்கிறார்களோ, மிகச் சொற்ப தொகையினரே ஆன முதலாளித்துவச் சிறுபான் மையோரையும், தமது முதலாளித்துவப் பழக்கங்களை விட் டொழிக்க விரும்பாத கனவான்களையும், முதலாளித்துவத்தால் அறவே பாழ்படுத்தப்பட்டுவிட்ட தொழிலாளர்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்கிறார்களோ'' -அத்தருணம் முதலாய் எவ்வகையான அரசாங்கத்துக்குமுள்ள தேவை அடியோடு மறையத் தொடங்கிவிடும். ஜன நாயகம் எவ்வள வுக்கு எவ்வளவு பூரண மானதாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேவையற்றதாகும் தருணம் அருகாமையில் வந்துவிடுகிறது. ஆயுதமேந்திய தொழிலாளர்களாலான அரசு, ''அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசா யில்லாத இது. எவ்வளவுக்கு எவ்வளவு ஜன நாயகமுடைத்த தாய் ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் ஒவ் வொரு வடிவமும் வேகமாய் உலர்ந்து உதிரத் தொடங்குகிறது.

ஏனென்றால், எல்லோரும் சமூகப் பொருளும் பத்தியை நிர்வகிக்கக் கற்றுக் கொண்டு சுயேச்சையாய்த் தாமே நடைமுறையில் நிர்வகிக்கும்போது, சுயேச்சையாய்த் தாமே கணக்குகள் பதிவு செய்து கொண்டு சோம்பேறிகளையும் செல்வச் சீமான்களது புதல்வர்களையும் மோசடிக்காரர்களை யும் ஏனைய முதலாளித்துவ மரபுகளின் காவலர்களையும் கண்காணிப்புச் செய்யும்போது, இந்த வெகுஜன அளவி லான கணக்கீட்டிலிருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்புவது தவிர்க்கமுடியாத வகையில் அவ்வளவு கடினமாகிவிடு மாதலால், அவ்வளவு அரிதிலும் அரிதான விதிவிலக்காகி விடுமாதலால், மற்றும் உடனுக்குடன் கடுந் தண்டனைக்கு உரியதாக்கப்படலாமாதலால் (ஏனெனில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் - காரிய வழிப்பட்டவர்களே அன்றி உணர்ச்சிப் பசப்பாளர்களான அறிவுத் துறையினரல்ல, யாரும் தம்மிடம் வாலாட்ட இடந்தர மாட்டார்கள்), சமூக வாழ்க்கையின் சாதாரண அடிப்படை விதிகளைப் பற்றி யொழுக வேண்டிய அவசியமானது விரைவில் நிலை யான ஒரு பழக்கமாகிவிடும்.

இனி கம்யூனிச சமுதாயத்தின் முதற்கட்டத்திலிருந்து அதன் உயர் கட்டத்துக்கு மாறிச் செல்லவும், அதனுடன் கூடவே அரசு பூரணமாய் உலர்ந்து உதிரவும் பாதை விரியத் திறக்கப்பட்டுவிடும்.
(அரசும் புரட்சியும்)


No comments:

Post a Comment