Sunday 2 June 2019

4. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு சமுதாய வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்- ஸ்டாலின்


“உலகம் அறியப்படக்கூடியதே - இயற்கையின் வளர்ச்சி விதிகளைப் பற்றிய நமது அறிவு உண்மை அறிவுதான்; புறநிலை உண்மையைப் போலவே அதுவும் ஏற்கத்தக்கதுதான் என்றானால், அதைத் தொடர்ந்து, சமூக வாழ்வும் சமுதாயத்தின் வளர்ச்சியும் அறியக் கூடியவையே என்றும், சமூகத்தின் வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியல் விவரங்கள் உண்மையானவையே, அவையும் புறநிலை உண்மைகளைப் போலவே ஏற்கத்தக்கதே என்றாகிறது.

எனவே, சமூக வாழ்க்கையின் தோற்றங்கள் எவ்வளவு சிக்கல் நிறைந்திருந்தபோதிலும் சரி; சமூக வரலாற்றைப் பற்றிய அறிவியல் கூட பிற அறிவியல் பிரிவுகளைப் போல - உதாரணமாக, உயிரியலைப் போல - அவ்வளவு கறாரான அறிவியலாக விளங்க முடியும். மேலும், சமூக வளர்ச்சியின் விதிகளை நடைமுறை அறி வியலாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே.

எனவே, பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழி காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமுதாய வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

எனவே, மனித குலத்தின் இன்பமயமான எதிர்காலம் என்ற ஒரு கனவாக இருந்து வந்த சோசலிசம், இப்பொழுது ஒரு அறிவியலாக மாற்றப்படுகிறது.

ஆகவே, அறிவியலுக்கும் நடைமுறை வேலைக்கும் உள்ள இணைப்பு, கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலுள்ள இணைப்பு, அவற்றின் ஒற்றுமை - இவைதான் பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக இருக்க வேண்டும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் – பக்கம் 22-23)


No comments:

Post a Comment