Sunday 2 June 2019

3. சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் பற்றி ஸ்டாலின்


“இயற்கைத் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாயுள்ளதும் தான் இயற்கையின் வளர்ச்சி விதிகள் என்று ஏற்பட்டால், அப்பொழுது சமுதாய வாழ்வின் தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ளதும்தான், அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் என்று ஆகும்; ஏதோ தற்செயலாக அவை ஏற்பட்டவை அல்ல என்பதாகும்.

எனவே, சமூக வாழ்வும், சமுதாய வரலாறும் ''தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் ஒரு குவியல்'' என்கிற கருத்துத் தவறாகிறது. ஒழுங்கான விதிகளின்படி நடக்கும் சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியதே வரலாறு என்றும் அது ஆகிறது. மேலும், சமுதாய வரலாற்றின் ஆராய்ச்சி ஒரு அறிவியலாக மாறுகிறது.

எனவே, பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் எவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும்? 'தலைசிறந்த மனிதர்களின் நல்லாசிகளை ஆதாரமாகக் கொண்டல்ல - ''பகுத் தறிவின்'' தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டல்ல - “உலகளாவிய அறநெறிகளைக் கொண்டல்ல. மாறாக, சமுதாய வளர்ச்சி விதிகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த விதிகளைப் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் இருக்க வேண்டும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் – பக்கம் 21)


No comments:

Post a Comment