Friday 7 June 2019

வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தில் சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கப் புரட்சியால் தீர்க்கப்படுகிறது - எங்கெல்ஸ்


“உற்பத்தி சாதனங்களும் (மற்றும் உற்பத்தியாளர்களும்) பெரிய தொழிலகங்களிலும் பட்டறைகளிலும் குவிந்து செறிந்து மெய்யாகவே சமூகமயமான உற்பத்தி சாதனங்களாக (சமூகமயமான உற்பத்தியாளர்களாக) மாற்றமடைவது நிகழ்ந்தது. ஆனால் இந்த (சமூகமயமான உற்பத்தியாளர்களும்) உற்பத்தி சாதனங்களும் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களும் இந்த மாற்றத்துக்குப் பிற்பாடும் முன்பு போலவே இருப்பதால், அதாவது தனி ஆட்களின் உற்பத்தி சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவும் இருப்பதாய்க் கொள்ளப்பட்டுக் காரியங்கள் நடைபெற்றன.

இது காறும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருட்களையும் தாமே சுவீகரித்துக் கொண்டிருந்தார், ஏனெனில் பொதுவாக அது அவரது உற்பத்திப் பொருளாகவே இருந்தது, ஏனையோருடைய உதவி விதிவிலக்காகவே இருந்தது. இப்பொழுது உழைப்புச் சாதனங்களின் உடைமையாளர் உற்பத்திப் பொருள் தம்முடைய உற்பத்திப் பொருளாய் இல்லாமல் முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் அதைத் தாமே தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொண்டார்.

இவ்வாறாக, இப்பொழுது சமூக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருட் கள், உண்மையில் உற்பத்தி சாதனங்களை இயக்கிப் பரிவர்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்தோரால் சுவீகரிக்கப் படவில்லை ஆனால் முதலாளிகளால் சுவீகரிக்கப்பட்டன. உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாகி விட்டன. ஆயினும், தனி ஆட்களது தனியார் பொருளுற்பத்தி இருப்பது போலவும் ஆகவே இதன்படி ஒவ்வொருவரும் தமது உற்பத்திப் பொருளுக்குத் தாமே உடைமையாளராய் இருந்து அதைச் சந்தையில் விற்பனை செய்வது போலவும் அமைந்த சுவீகரிப்பு முறைக்கு இந்த உற்பத்தி சாதனங்களும் பொருளுற்பத்தியும் உட்படுத்தப் பட்டன. பொருளுற்பத்தி முறையானது இந்த சுவீகரிப்பு முறைக்கு ஆதாரமாயமைந்த நிலைமைகளை ஒழித்திட்ட போதிலும் அது இம்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

புதிய பொருளுற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாட்டில் இன்றையச் சமூகப் பகைமைகள் முழுவதன் கரு அடங்கியிருக்கிறது. எல்லா முக்கிய உற்பத்தித் துறைகளிலும் பொருளாதாரத்துறையில் நிர்ணயமான நாடுகள் அனைத்திலும் புதிய பொருளுற்பத்தி முறை எவ்வளவுக்கெவ்வளவு ஆக்கம் பெற்றதோ தனி ஆள் பொருளுற்பத்தியை எவ்வளவுக்கெவ்வளவு சுருங்கச் செய்து அற்பசொற்பமாக்கியதோ அவ்வளவுக்கவ்வளவு சமூகமயப் பொருளுற்பத்திக்கு முதலாளித்துவ சுவீகரிப்பு ஒவ்வாதென்பது தெளிவாய்ப் புலப்படுத்திக் காட்டப்பட்டது.
… … … … …
ஒரு புறம் தமது கைகளில் உற்பத்தி சாதனங்கள் திரண்டு குவிந்திருந்த முதலாளிகளுக்கும், மறுபுறம் தமது உழைப்புச்சக்தி அன்றி வேறு எந்த உடைமையும் இல்லாத உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான பாகுபாடு முழு நிறைவாக்கப்பட்டது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது
… … … …
ஆரம்பத்தில் இவை இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாய் இருக்கின்றன. இவர்கள் இவற்றைச் சிறிது சிறிதாகவும் அனுபவத்தின் வாயிலாகவும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே இவை உற்பத்தியாளர்களைச் சாராது எதேச்சையாகவும் அவர் களுக்கு எதிராகவும் அவர்களது தனிவகைப் பொருளுற்பத்தி முறையின் இரக்கமற்ற இயற்கை விதிகளாய்ச் செயல்படுகின்றன. உற்பத்திப் பொருளானது உற்பத்தி யாளர்களை ஆட்சி புரிகிறது.
… … … …
சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு இப்பொழுது தனிப்பட்ட தொழில் நிலையத்தில் பொருளுற்பத்தியின் ஒழுங்கமைப்புக்கும் பொதுவில் சமுதாயத்திலான பொருளுற்பத்தி யின் அராஜகத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறது.
… … … …
நவீன இயந்திர சாதனங்களின் முடிவின் றி அதிகரித்து வரும் செம்மைத் திறன், சமுதாயப் பொருளுற்பத்தியின் அரா ஜகத்தால் தனிப்பட்ட தொழில் துறை முதலாளி ஒயாமல் தன து இயந்திர சாதனங்களை மேம்படுத்து மாறும், ஓயாமல் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறும் வலு ந்தம் செய்யும் கட்டாய விதியாக மாற்றப்படுகிறது என்பதை நாம் கண்டோம், டொரு (ளுற்பத்தியின் அளவை விரிவாக்கு வதற்குரிய வெறும் சாத்தியப்பாடும் கூட இந்தத் தனிப் பட்ட முதலாளிக்கு இதே போன்ற ஒரு கட்டாய விதியாய் மாற்றப்படுகிறது. நவீனத் தொழில் துறையின் அபாரமான விரிவகற்சித் திறன்-இதனுடன் ஒப்பிடுகையில் வாயுக்களுக்கு இருக்கும் இச்சக்தி சிறு பிள்ளை விளையாட்டுப் போன்றதாகும் - இயல்பு மற்றும் அளவு என்ற இரு வழிகளிலும் விரிவாக்கத்துக்கு இன்றியமையாத அவசியமாய்ச் செயல்படுகிறது என்பது இப்பொழுது நமக்குத் தெரிகிறது. இந்த அவசியம் எந்த விதமான எதிர்ப்பையும் சற்றும் பொருட்படுத்தாது எள்ளி நகையாடுகிறது.

நுகர்வாலும், விற்பனையாலும், நவீனத் தொழில் துறையின் உற்பத்திப் பொருள்களுக்குள்ள சந்தைகளாலும் அதற்குக் காட்டப்படும் எதிர்ப்பு இத்தகை யதே. ஆனால் விரிவாகவும் செறிவாகவும் விரிவடைவதற்குச் சந்தைகளுக்கு இருக்கும் ஆற்றலை முற்றிலும் வேறு விதமான விதிகள் பிரதான மாயும் ஆட்சி புரிகின்றன, இவை மிகவும் குறைந்த வலுவுடன் செயல்படுபவை. சந்தைகளின் விரிவ கற்சி பொருளுற்பத்தியின் விரிவகற்சியின் வேகத்துக்கு ஈடாக நடைபோட முடியாது. மோதல் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது. இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையைச் சுக்கு நூறாய்த் தகர்த்திடாத வரை இதனால் எவ்வித மெய்யான தீர்வையும் உண்டாக்க முடியாததால் மோதல் கள் கால் அலை வட்ட முறையில் நிகழ்கின்றன. முதலாளித்துவப் பொருளுற்பத்தி இன் னொரு " நச்சுச் சுழலை'' உண்டாக்கி விட்டது.

உண்மை நடப்பைக் கூறுமிடத்து, முதலாவது பொது நெருக்கடி வெடித்த 1825 ஆம் ஆண்டு முதலாய், பத்து ஆண்டு (ளுக்கு ஒரு தரம் தொழில் மற்றும் வாணிப உலகு முழுவ தி லும் எல்லா நாகரிக மக்களிடையிலும் அதிகமாகவோ குறைவாகவோ வளர்ச்சி குன்றிய நிலையில் இவர்களைச் சார்ந்து வாழ்வோரிடையிலும் பொருளுற்பத்தியும் பரிவர்த் தனையும் நிலை குலைந்து விடுகின்றன. வாணிபம் தடைபட்டு நின்று போகிறது; சந்தைகள் விற்பனை இன்றி நிரம்பி வழி இன்றன; எந்தளவு விலை போகவில்லையோ அந்தளவு பண்டங் சுள் எண்ணிறந்தவையாய்க் குவிந்து கிடக்கின்றன; ரொக்கப் பணம் மறைந்து விடுகிறது; கடன் செலாவணி இல்லாமற் போய் விடுகிறது; ஆலைகள் மூடிக்கிடக்கின்றன; பெருந்திர ளான தொழிலாளர்கள் பிழைப்புக்கு வேண்டிய சாதனங்கள் இல்லாது தவிக்கிறார்கள், காரணம் இந்த சாதனங்களை அவர்கள் மித மிஞ்சி உற்பத்தி செய்துவிட்டார்கள்; முறிவுகளுக்கும் ஜப்திகளுக்கும் முடிவில்லாமற் போகிறது.

பல ஆண்டுகளுக்கு மந்தம் நீடிக்கிறது. உற்பத்தி சக்திகளும் பொருள் களும் பெருவித அளவில் விரயமாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின் றன; பிறகு, திரண்டு அம்பாரமாய்க் குவிந்து விட்ட பண்டங்கள் அதிகமாகவோ குறைவாகவோ மதிப்புத் தேய்ந்து கரைந்து இறுதியாய் மறையும் வரை, பொருளுற்பத்தியும் பரிவர்த்தனையும் மெதுவாக மீண்டும் இயங்கத் தொடங்கும் வரை நிலைமை இதுவே.

சிறிது சிறிதாக வேகம் அதிகரிக்கிறது. இது பெரு நடையாகிறது. தொழில் துறையின் பெரு நடை ஒட்டமாய் மாறுகிறது; ஒட்டம் பெருகி, தொழில் துறை, வாணிபக் கடன் செலாவணி, ஊக வாணிபம் ஆகிய எல்லாமாய்ச் சேர்ந்து தாவிக்குதித்துத் தலை தெறிக்க ஓடி முடிவில் குப்புற விழும்படி, துள் ளிப் பாய்ந் தோடிய பின் தொடங்கிய நிலைக்கே-நெருக்கடியின் சாய்க் குழியில் வந்து முடிவுறுகின் றன. தொடர்ந்து திரும்பத் திரும்ப இதே கதை தான். 1825 ஆம் ஆண்டு முதலாய் ஐந்து தடவை இதை அனுபவத்திருக்கிறோம், தற்போது (1877) ஆறாவது தடவையாய் இவை அனுபவித்துக் கொண்டிருக் கிறோம்.
… … … …

இந்த நெருக்கடிகளில் சமுதாயமயமான பொருளுற்பத் திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலுள்ள முரண் பாடு மூர்க்கமாய் வெடித்தெழுகிறது. பரிவர்த்தனைப் பண்டப் புழக்கம் தற்காலியமாய் நின்று விடுகிறது. புழக்கத்துக் குரிய சாதன மான பணம் புழக்கத்துக்கு இடையூறாகி விடு கிற து. பண்டங்க ளின் உற்பத்தி மற்றும் புழக்கம் சம்பந்தமான விதிகள் எல்லாம் தலை கீழாகி விடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்ச நிலையை அடைந்து விட்டது. பொருளுற்பத்தி முறை பரிவர்த்தனை முறையினை எதிர்த்துக் கலகம் புரி கிறது, பொருளுற்பத்தி சக்திகள் எதை மீறி வளர்ந்து விட்டனவோ  அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராகக் கலகம் செய்கின்றன.
… … … …

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் பொறியமைவு முழுதுமே அதனாலேயே தோற்றுவிக்கப் பட்ட உற்பத்தி சக்திகளால் நெரிக்கப்பட்டுக் குலைந்து போ கிறது. பெருவாரியான இந்தப் பொருளுற்பத்தி சாதனங்களை அதனால் மூல தனமாக மாற்ற முடியவில்லை. இவை செயலற்று முடங்கிக் கிடக்கின்றன.
… … … …

ஒரு புறத்தில் முதலா ளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்து இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை புரியத் திறனற்றது என்பது நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. மறு புறத்தில் இந்த உற்பத்தி சக்திகள் தற்போது நிலவும் முரண்பாட்டை நீக்குவதற்காக, மூலதனம் என்ற முறையில் தமக்குள்ள இயல்பை ஒழிப்பதற்காக, சமுதாயப் பொருளுற்பத்தி சக்திகள் என்ற முறையில் தமக்குள்ள தன்மை நடைமுறையில் அங்கீகரிக்கப்படுவதற்காக மேலும் மேலும் கூடுதலான ஆற்றலுடன் போராடி முன்னேறிச் செல்கின்றன.

உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் வலிமை மிக்கனவாய் வளர்ந்து, தமது முதலாளித்துவ இயல்பை எதிர்த்துப் புரியும் இந்தக் கலகம், அவற்றின் சமுதாயத் தன்மை அங்கீகரிக்கப்படுவதன் அவசியம் ஆகியவை முதலாளித்துவ நிலைமைகளில் எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு அவற்றை மேலும் மேலும் சமுதாயப் பொருளுற்பத்தி சக்தி களாய் நடத்தும்படி முதலாளி வர்க்கத்தைக் கட்டாயப் படுத்துகின்றன.
… … … …

முதலாளித்துவச் சமுதாயத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தியானது வரப்போகும் சோஷலிசச் சமுதாயத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது.
… … … …

நவீன உற்பத்தி சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்துவம் ஆற்றலற்று விட்டது என்பதை நெருக்கடிகள் எடுத்துக் காட்டுகின்றன என்றால் பொருளுற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் நிலையங்கள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் (டிரஸ்டுகளாகவும்) அரசு உடைமைகளாகவும் மாற்றப்பட்டிருப்பதானது இந்தக் காரியத்துக்கு முதலாளித்துவ வர்க்கத்தினர் எவ்வளவு தேவையற்ற வர்களாகி விட்டனர் என்பதைக் காட்டுகிறது. முதலாளிள் செய்துவந்த எல்லாச் சமூக வேலைகளையும் இன்று சம்பளம் பெறும் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர். லாப ஈவுகளை (dividents) மூட்டை கட்டிக் கொள்வதையும், சீட்டுக் கத்தரிப்பதையும் [tearing off couporns), முதலாளிகள் ஒருவர் முதலை ஒருவர் சூறையாடிக் கொள்ளும் பங்கு மாற்றுச் சந்தையில் சூதாடுவதையும் தவிர முதலாளிக்கு இனிச் சமூக வேலை எதுவும் இல்லாமற் போய் விட்டது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முதலில் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது. இப்பொழுது அது முதலாளிகளையும் வெளியே தள் ளி, தொழிலாளர்களைச் செய்தது போலவே இவர்களையும் உடனடியாகத் தொழில் துறை ரிசர்வ் பட்டாளத்தின் அணி ளுக்கு இல்லாவிட்டாலும், வேண்டாத உபரி மக்கள் (தொகையின் அணிகளுக்குத் தாழ்த்தி விடுகிறது.
… … … …

ஏற்கெனவே சமூகமயமாகி விட்ட பிரம்மாண்டமான பொருளுற்பத்தி சாதனங்களை மேலும் மேலும் அரசின் சொத்தாக மாற்ற மடையும்படி நிர்ப்பந்தம் செய்யும் அதே போதில் இந்தப் பெருமாற்றத்தினைச் செய்து முடிப்பதற்கான வழியையும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தானே சுட்டிக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசுச் சொத்தாய் மாற்றுகிறது.
… … … …

பாட்டாளி வர்க்கப் புரட்சி:-

முரண்பாடுகளுக்குத் தீர்வு ஏற்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாய் மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூல தன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர் மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.

பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல் காலத்திற்கொவ்வாத தாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தி யில் அராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங் சுமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகி விடும் மனிதன், அதே போதில் இயற்கையின் அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான்-சுதந்திரமடைகிறான்.]

உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும் முழு அளவில் தெரியப் படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவார்த்த வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.
(டூரிங்குக்கு மறுப்பு)

No comments:

Post a Comment