Monday, 12 June 2017

உபரி மதிப்பு - மார்க்ஸ்

"உழைப்ப்ளி உழைப்பு நிகழ்முறையில் ஒரு பகுதியின் போது, தன் உழைப்புச் சக்தியின் மதிப்பை மட்டுமே, அதாவது தன்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மட்டுமே உற்பத்தி கெய்கிறார்.. , இப்போது, அவரது வேலை சமுதாய உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பின் அங்கமே என்பதால், அவர் உள்ளபடியே தான் நுகர்கிற அவசியப் பண்டங்களை தானே நேரடியாக உற்பத்தி  செய்வதில்லை, பதிலுக்கு அவர் அந்த அவசியப் பண்டங்களின் அல்லது அவற்றை வாங்குவதற்கான பணத்தின் மதிப்புக்கச் சமமான மதிப்புடைய குறிப்பிட்ட ஒரு சரக்கை, .. உற்பத்தி செய்கிறார்.
..
படைக்கப்படும் புதிய மதிப்பு முன்னீடு செய்யப்படட மாறும்-மூலத்தை மாற்றீடு செய்வதோடு சரி. இக்காரணத்தால் மூன்று ஷில்லிங் என்ற புதிய மதிப்பின் உற்பத்தி வெறும் மறுவுற்பத்தியின் சாயலைப் பெறுகிறது. ஆகவே, வேலை-நாளில் இந்த மறுவுற்பத்தி நடைபெறும் பகுதியை "அவசிய" உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்பை "அவசிய உழைப்பு" ("necessary" abour) என்றும் அழைக்கிறேன். தொழிலாளியைப் பொறுத்தவரை அவசியம் என்பது எப்படியென்றால், இது அவரது உழைப்பின் குறிப்பிட்ட சமூக வடிவத்தை சார்ந்ததன்று, மூலதனத்தையும் முதலாளிகளின் உலகையும் பொறுத்த வரை அவசியம் என்பது எப்படி என்றால், தொழிலாளி இல்லையேல் முதலாளியும் இல்லை.

தொழிலாளி ஆனவர் உழைப்பு நிகழ்முறையின் இரண்டாவது காலப் பகுதியிலும்-அவரது உழைப்பு அவசிய-உழைப்புபாயிராத அப்பகுதியிலும்-உழைக்கிறார், உழைப்புச் சக்தியைச் செலவிடுகிறார் என்பது மெய்தான், ஆனால், அவரது உழைப்பு முன்போல் அவசிய-உழைப்பாயிராததால் தனக்கென அவர் மதிப்பேதும் படைப்பதில்லை. அவர் உபரி-மதிப்பைப் படைக்கிறார், முதலாளியைப் பொறுத்த வரை, இவ்வுபரி-மதிப்பு ஒன்றுமே இல்லாமல் படைக்கப்படும் படைப்பில் அருமைபெருமைகளை எல்லாம் கொண்டதாகிறது. வேலை-நாளின் இந்தப் பகுதிக்கு உபரி-உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்புக்கு உபரி-உழைப்பு (surplus-labour) என்றும் பெயர் சூட்டுகிறேன்."

(மூலதனம் I பக்கம் 294-296)

மாறா-மூலதனம், மாறும்-மூலதனம்

"..உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவுவழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது சுருக்கமாக மாறா-மூலதனம் (constant capital) என்று அழைக்கிறேன்.

மறுபுறம், உற்பத்தி நிகழ்முறையில், உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாது ஒரு மிகையையும், அதாவது உபரி-மதிப்பையும் உற்பத்தி செய்கிறது, இந்த மிகை அல்லது உபரி-மதிப்பு மாறுபடக் கூடியது, சூழ்நிலைகைகேற்ப அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். மூலதனத்தின் இந்தப் பகுதி மாறாப் பருமன் என்ற நிலையிலிருந்து மாறும் பருமனாகத் தொடர்ந்து மாற்றப்படுகிறது. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி அல்லது சுருக்கமாக மாறும்-மூலதனம் (variable capital) என்று அழைக்றேன்."

(மூலதனம் I பக்கம் 286)

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளியின் உபரி உழைப்பு முதலாளியால் கையகப்படுத்துதல்

“உற்பத்திப் பொருள் முதலாளிக்குரிய சொத்தகுமே தவிர, அதன் நேரடி உற்பத்தியாளராகிய உழைப்பாளிக்குரியதன்று. முதலாளி ஒரு நாள் உழைப்புச் சக்திக்கு அதன் மதிப்புக்குரிய விலை கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், இந்த உழைப்புச் சக்தியை ஒரு நாளைக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர் உரிமை படைத்தவர். ஒரு நாளைக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர் உரிமை படைத்தவர். ஒரு நாளைக்கு அவர் வாடகைக்கு அமர்த்தும் குதிரையையோ அது போன்ற வேறொன்ளையோ பயன்படுத்திக் கொள்ள அவருக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை இதிலும் உண்டு.

சரக்கின் பயன் சரக்கை வாங்கியவருக்கே உரியது. உழைப்புச் சக்தியை விற்றவர் தன் உழைப்பைக் கொடுப்பதன் மூலம் உண்மையில் செய்வதெல்லாம் தான் விற்ற பயன் மதிப்பைத் துறப்பதுதான். பட்டறைக்குள் அவர் அடிவைக்கும் தருணத்திலிருந்து, அவரது உழைப்புச் சக்தியின் பயன் மதிப்பும், ஆகவே உழைப்பாகிய அதன் பயனும்கூட முதலாளிக்கே உரியவை. உழைப்புச் சக்தியை வாங்குவதன் மூலம், முதலாளி உற்பத்திபி பொருளின் உயிரில்லாத ஆக்கக் கூறுகளுடன் நுரைக்கும் உயிர்ச்சக்தியாக உழைப்பை இணைக்கிறார். அவரது கண்ணோட்டத்தில் உழைப்பு நிகழ்முறை என்பது வாங்கப்பட்ட சரக்கின்,  அதாவது உழைப்புச் சக்தியின் நுகர்வே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை, ஆனால் உழைப்புச் சக்திக்கு உற்பத்திச் சாதனங்கள் வழங்குவதன் மூலமாக அல்லாமல் இந்த நுகர்வை நிகழச் செய்ய முடியாது. உழைப்பு நிகழ்முறை என்பது முதலாளி வாங்கியிருக்கிறவற்றுக்கு இடையில், அவரது சொத்தாகியிருப்பவற்றுக்கு இடையில் நிகழ்வதாகும்.”
(மூலதனம்- தொகுதி 1 பக்கம் 254-255)


உற்பத்தியில் முதலாளி ஈடுபடுவதின் நோக்கம் உபரிமதிப்பை படைப்பதே – மார்க்ஸ்

“முதலாளி தனதாக்கிக் கொள்கிற உற்பத்திப் பண்டம்- உதாரணமாக, நூல் அல்லது பாத அணிகள் – பயன் மதிப்பாகும். ஆனால் ஒரு விதத்தில் பாத அணிகள் சமூக முன்னேற்றம் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளன, நமது முதலாளி தீர்மானகர “முன்னேற்றவாதி” ஆவார் என்ற போதிலும், அவர் பாத அணிகளைப் பாத அணிகளின் நிமித்தமே தாயாரிப்பதில்லை.

சரக்கு உற்பத்தியில் பயன் மதிப்பு என்பது எவ்விதத்திலும் சரக்குகளின் உற்பத்தில் “”அதன் நிமித்தமே விரும்பப்படுகி” ஒன்றன்று. பயன் மதிப்புகள் பரிவர்த்தனை மதிப்பின் பொருளாயத ஆதாரமாக, அதன் சேமிப்பகங்களாக இருக்கிற காரணத்தாலும், இருக்கிற அளவிலுமே அவற்றை முதலாளிகள் உற்பத்தி செய்கின்றனர்.

நமது முதலாளி இரண்டு குறிக்கோள்களை மனத்திற் கொண்டுள்ளார்.

முதலாவதாக, பரிவர்த்தனையில் மதிப்புடையதான பயன் மதிப்பை, அதாவது விற்க வேண்டியதென விதிக்கப்பட்ட பண்டத்தை, சரக்கை உற்பத்தி செய்ய விரும்புகிறார், இரண்டாவதாக, உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட சரக்குகளின், அதாவது பொதுச் சந்தையில் தன் கைப்பணத்தைக் கொண்டு வாங்கிய உற்பத்திச் சாதனங்கள், உழைப்புச் சக்தி ஆகியவற்றினது மதிப்புகளின் மொத்தத்தை விடவும் அதிக மதிப்புடைய சரக்கை உற்பத்தி செய்ய விரும்புகிறார். அவர் உற்பத்தி செய்ய நினைப்பது பயன் மதிப்பு மட்டுமன்று, சரக்கும்கூட, பயன் மதிப்பு மட்டுமன்று மதிப்பும்கூ, மதிப்பு மட்டுமன்று, அதேபோது உபரி மதிப்பும்கூட.
…
சரக்குகள் எப்படி ஒருங்கே பயன் மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருக்கின்றனவோ, அதே போல அவற்றை உற்பத்தி செய்யும் நிகழ்முறையும் ஒருங்கே உழைப்பு நிகழ்முறையாகவும், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையாகவும் இருத்தல் வேண்டும்.
…
ஒவ்வொரு சரக்கின் மதிப்பும் அதில் செலவிடப்பட்டு பொருள் வடிவாக்கப்பட்டுள்ள உழைப்பின் அளவால், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் அதன் உற்பத்திக்கு அவசியமான வேலை நேரத்தால்  நிர்ணயிக்கப்படுகிறது.”

(மூலதனம்- தொகுதி 1 பக்கம் 256-257)

Sunday, 11 June 2017

கட்சியின் வர்க்கப் பணியைப் பற்றி லெனின்

“ஒவ்வொரு கட்சிக் குழுவும் தொழிலாளர் கமிட்டியும் “மக்கள் திரளிடையே கிளர்ச்சி, பிரசாரம் மற்றும் நடைமுறை ஸ்தாபனப் பணிகளுக்கான அடித்தளமாக அமைய வேண்டும்.” அதாவது அவை மக்கள் திரள் எங்கே செல்கிறதோ அங்கே செல்ல வேண்டும், ஒவ்வொரு படியிலும் மக்கள் திரளின் உணர்வை சோஷலிசத்தின் திசையில் உந்த வேண்டும், ஒவ்வொரு தனிப்பட்ட பிரச்சினையையும் பாட்டாளி வர்க்கத்தன் பொதுவான கடமைகளுடன் இணைக்க வேண்டும், ஸ்தாபனத்தின் ஒவ்வொரு செயலையும் வர்க்கத்தைக் கொட்டிப்படுத்தும் நடவடிக்கையாக மாற் வேண்டும், ஊக்கம் மற்றும் சித்தாந்த ரீதியான செல்வாக்கினது ஆற்றலின் விளைவாக (பட்டம் பதவிகள் மூலமல்ல என்பது கண்கூடு) சட்ட பூர்வமான எல்லா பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் தலைப் பாத்திரத்தை வென்றுபெற வேண்டும். இந்தக் குழுக்களும் கமிட்டிகளும் சில சமயம் மிகச் சிறியனவாக இருந்த போதிலும் அவை கட்சி மரபு மற்றும் கட்சி ஸ்தாபனத்தால், திட்டவட்டமான வர்க்கவேலைத் திட்டத்தால் சேர்த்து இணைக்கப்படும்”

(கட்சிப் பாதை- 1909)

மார்க்சிய அடிப்படையின் மீது சந்தேகம் கொள்ளும் திருத்தல்வாதத்தை எதிர்த்து- லெனின்

(“தியரி” (theory) –கோட்பாடு- என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு மாறுபட வேண்டிய நடைமுறையை வகுத்தளிக்கிறது. மாற்றத்தை எதைக் கொண்டு அணுகுகிறோமோ அது மார்க்சிய விஞ்ஞான அடிப்படையேயாகும். அடிப்படை வளருமா? ஆமாம் என்கிறார் லெனின், அடிப்படை அடிப்படையைக் கொண்டு வளரும் என்கிறார். அடிப்படையை மீறிவளர்ந்தால் அடிப்படை பொய்ப்பித்துவிட்டது என்று பொருள். நவீன திருத்தல்வாதிகள் மார்க்சிய அடிப்படையை மீறிவளர்க்க முயற்சிக்கின்றனர்.)
“தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் (ideological wavering) பீடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ் எங்கெல்ஸ் போதனைகள் புரட்சிக் கோட்பாட்டுக்குரிய உறுதிவாய்ந்த அடித்தளமாய் (foundation) கருதப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழைமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன.
…
நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் நிலையையே (Marxist theoretical position) எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம், மார்க்சியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்தில் இருந்து  விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது, இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது, இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது, சொத்துடைமையற்ற லட்சோபலட்சக் கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவதை எப்படி மூடிமறைக்கிறது என்பதை விளக்கியதன் மூலம், நவீன காலமுதலாளித்துவப் பொருளாதாத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று.

நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிசத் சமூக அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலைமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக்காட்டிற்று.

வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள், மற்றும் அரசியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள், கடுஞ்சிக்கலான கோட்பாடுகள் (intricate doctrines) ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்கப் போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந் திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது.

புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று, சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப் போராட்டத்தைத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.

இப்பொழுது நாம் கேட்கிறோம்: இந்தக் கோட்பாட்டை (this theory) “புதுப்பிப்பதாய்” “renovators” உரக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக் காலத்தில் பெருங்கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மன் சோஷலிஸ்ட் பெர்ன்ஷ்டைனை மையமாய்க் கொண்டு திரண்டு இருப்போராகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இக்கோட்பாட்டில் புகுத்தியிருக்கிறார்களா?  எதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்திடவில்லை. ( they have not taught the proletariat any new methods of struggle). மாறாக, இவர்கள் பிற்பட்ட கோட்பாடுகளில் இருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துப் போராட்டக் கோட்பாட்டையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் கோட்பாடடை- பாட்டாளி வர்க்கத்தின் மிகக்கொடும் பகைவர்களுக்கு, சோஷலிஸ்டுகளை வருத்துவதற்காக அயராது புது வழிமுறைகளைத் தேடியலையும் அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துச செல்லும் கோட்பாடடை- பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்.
…
மார்க்சின் கோட்பாட்டை (Marx’s theory) நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய், மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோஷலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது, சோஷலிஸ்டுகள் வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசைகளிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம்.

மார்க்சின் கோட்பாட்டை (Marx’s theory) சுயேச்சையான முறையில் விரிவுபட (independent elaboration) வளர்த்திடுவது, முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தக் கோட்பாடு பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே (general guiding principles) அளித்திடுகிறது, குறிப்பான முறையில் (in particular) அவை பிரான்சிலிருந்து வேறுவிதமாய் இங்கிலாந்திலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் பிரயோகிக்கப்படுபவை (applied). ஆகவே கோட்பாட்டுப் பிரச்சினைகள் (theoretical questions) பற்றிய கட்டுரைகளுக்கு எமது பத்திரிகையில் மகிழ்ச்சியுடன் இடம் அளிப்போம், சர்சைக்குரிய விவரங்களை (controversial points) பகிரங்கமாய் விவாதிக்குமாறு எல்லாத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”2

(நமது திட்டம்-1899)

(லெனின் தெளிவாகத்தான் கூறியிருக்கிறார், வளர்த்திடுவது என்பதைற்குப் பொருள், அந்தந்த நாட்டின் சூழ்நிலைமைக்கு ஏற்ப போராட்ட வடிங்களை அமைத்துக் கொள்வதேயாகும். அதாவது மார்க்சியத்தை அந்தந்த நாட்டிற்கு ஏற்ப பிரயோகிப்பதை (applied) பற்றி பேசியிருக்கிறார், ஆனால் இந்த நவீன திருத்தல்வாதிகள் விஞ்ஞான கம்யூனிசத்தின் அடிப்படைகளையே திருத்த, அவர்கள் பொருளில் வளர்க்க முயற்சிக்கின்றனர். வடிவத்தை அமைத்துக் கொள்வதற்கு கூறியதை அடிப்படைக்கு மாற்றிவிடுகின்றனர்.)

Saturday, 10 June 2017

சீர்திருத்தங்களை சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கொள்கிற வலதுதிரிபையும், நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதை அற்பப் பணியாகக் கொள்கிற இடதுவிலகலையும் பற்றி லெனின்


""
பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய செயற்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்சசிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும். 

இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வு படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்பவதற்குத் - தடையாகி விடுகின்றனர்"


(ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள்)