Friday, 19 August 2016

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு முதன்மை காரணமல்ல- லெனின்.

1897ஆண்டில் பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை (A Characterisation Of Economic Romanticism) என்ற நூலை லெனின் எழுதினார். சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார அறிஞரான ஸிஸ்மொந்தீயின் கருத்து ருஷ்ய நரோத்னிக்குகளின் சிற்றளவு உற்பத்தியின் கண்ணோட்டத்துடன் ஒத்ததாக இருந்தது. அதே போல் பெருந்தொழில் உற்பத்தி ஆதரவாளர்களுக்கு எதிரான போக்கிலும், முதலாளித்துவத்துக்கு வேண்டிய உள்நாட்டுச சந்தை பற்றிய பிரச்சினையிலும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். முதலாளித்துவம் சாத்தியமற்றது என்பதே இவ்விருவரின் மையக் கருத்தாகும். மொத்தத்தில் குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்குடையவர்களாவர்.

விரைவான திரட்சி பெரும் விபத்து என்கிற ஸிஸ்மொந்தீயின் கருத்தை லெனின் மறுக்கிறார்.

“இப்போது நாம் திரட்சி பற்றிய ஸிஸ்மொந்தீயின் கருத்தை முழுமையாக மதிப்பீடு செய்யமுடியும். விரைவான திரட்சி பெருவிபத்துக்குக் கொண்டுபோய்விடுகிறது என்கிற அவரது வன்கூற்று முற்றிலும் தவறாகும், அது திரட்சியை அவர் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதான் விளைந்தது,  அதேபோல் நுகர்வுக்கு மேல் உற்பத்தி போகக்கூடாது, ஏனெனில் நுகர்வுதான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்லும் கூற்றுகளும் கோரிக்கைகளும் முற்றிலும் தவறாகும். உண்மையிலே, வழக்கு இதற்கு எதிர்நிலையாகத்தான் உள்ளது, மற்றும் தனிக்குறிப்பான, வரலாற்றுரீதியிலே நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திலுள்ள யதார்த்தத்தின் பக்கம் ஸிஸ்மொந்தீ வெறுமே முதுகைத் திருப்பிக்கொள்கிறார், பகுப்பாய்வுக்குப் பதிலாகச் சிறுபூர்ஷ்வா தர்மோபதேசங்களை வைக்கிறார்”5

ஆடம் ஸ்மித்திடம் இருந்து ஸிஸ்மொந்தீ இரவல் வாங்கிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியைப் பற்றிய கருத்து தவறான கோட்பாடாகும். இது உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கொண்டு நெருக்கடிக்கு விளக்கம் அளிக்கிறது.

நெருக்கடியைப் பற்றிய இரண்டு கோட்பாடுகள் இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அழித்திடவும் இந்தப் பிரச்சினையை குழப்பிடவும் ஸிஸ்மொந்தீயின் ருஷ்ய ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். முதல் கோட்பாடு, நெருக்கடிக்கு காரணம் குறைநுகர்வு (underconsumption) என்கிறது. மற்றொரு கோட்பாடு சமூகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்திக்கும் தனியுடைமை விநியோக முறைக்கும் இடையே உள்ள முரண்பாடு என்கிறது. இதனை சற்று விரிவாக லெனின் விவரிக்கிறார்.

“நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாவது கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது. எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையக் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருக்கமாகச் சொல்வதானால், முந்தையக் கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தையக் கோட்பாடு உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.”6

       இரண்டு கோட்பாடுகளும் பொருளாதார அமைப்பு முறைக்குள்ளேயே உள்ள முரண்பாட்டைக் கொண்டு விளக்கிய போதிலும், முரண்பாட்டின் தன்மையில் வேறுபடுவதாக லெனின் குறிப்பிடுகிறார்.

குறைநுகர்வை மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் அதனை அதற்கே உரிய கீழ்மட்டத்தில் வைக்கிறது, ஏன் என்றால் இதனைக் கொண்டு நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று மார்க்சியம் போதிக்கிறது.

“.. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, முதலாளித்துவ உற்பத்தியின் முழுமையின் ஒரு பிரிவுடன் மட்டும் தொடர்புடைய உண்மையாக அதை வைக்கிறது. இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும், - அதாவது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான்.”

       நெருக்கடிகள் பற்றிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை ருஷ்யத் தன்னுணர்ச்சிவாதிகள் மறைத்திட தன்னாலானது அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் இரண்டு கோட்பாடுகளும் முதலாளித்துவ அடிப்படையைப் பற்றி வேறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது.

       குறைநுகர்வுக் கோட்பாடு முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையை பொய்யானது என்று சொல்லி எதார்த்தத்தை மறுப்பதின் மூலம் வேறுபாதையை நாடத்தூண்டுகிறது. ஆனால் உற்பத்தியின் சமூகமயமாக்கல் தன்மைக்கும் விநியோகத்தில் தனியுடைமை தன்மைக்கும் இடையேயான முரண்பாடாகக் கொள்ளும் போது முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சோஷலிச சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்வதை சுட்டிக்காட்டுகிறது.

குறைநுகர்வு கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“உண்மையிலே, உற்பத்திப் பொருட்களைத் திருப்பி எடுத்துக் கொள்வது அசாத்தியம் என்பதை வைத்தோ உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்தோ நெருக்கடிகளை நாம் விளக்குவோமானால் நாம் எதார்த்தத்தை மறுத்திடும் நிலைக்குப் போவோம், முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையின் சரித்தன்மையை நாம் மறுத்திடும் நிலைக்கும் போவோம், இந்தப் பாதை ஒரு “பொய்யான பாதை” என்று சொல்லி “வெவ்வேறான பாதைகளை”த் தேடிச் செல்கிறோம். இந்த முரண்பாட்டை வைத்து நெருக்கடிகளைப் பற்றிய முடிவுக்கு வருகிறபோது அது வளர வளர அந்த முரண்பாட்டில் இருந்து விடுபட்டு வெளியே வருவது மேன்மேலும் கடினமாகிவிடும் என்று நாம் நிச்சயமாக எண்ணப்புகுவோம்.”

மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-

“..உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்து நாம் நெருக்கடிகளை விளக்குவோமானால், அதன் வழியாக முதலாளித்துவத்துப் பாதை எதார்த்தமானது என்றும் முன்னேற்றகரமானது என்றும் அங்கீகரித்து “வேறான பாதைகளை”த் தேடிச்செல்வது முட்டாள்தனமான தன்னுணர்ச்சிவாதம் என்று நிராகரிக்கிறோம். அதன் வழியாக, இந்த முரண்பாடு மேலும் வளர வளர அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது மேலும் எளிதாகிவிடும் என்பதையும், இந்த அமைப்புமுறையின் வளர்ச்சிதான் வெளிவருவதற்கான வழியையும் கொடுக்கிறது என்பதையும் அங்கீகரிக்கிறோம்.”

விஞ்ஞான கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மையைப் பற்றி- லெனின்

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”


Sunday, 15 May 2016

முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது

மார்க்ஸ்:-
“சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துத் தனியுடைமை வருகிறது, இது பிறர் உழைப்பின்- பெயரளவில் சுதந்தரமான உழைப்பின் – சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனிவரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமூக அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே.

   இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது.
எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு-வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றை சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதக அளவில் வளர்கின்றன.

இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது, இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்று படுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுமையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலிருந்து விளைவதான முதலாளித்துவத் தனதாக்க முறை முதலாளித்துவத் தனியுடைமையைத் தோற்றுவிக்கிறது. உடைமையாளரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனியாள்-தனியுடைமையின் முதல் மறுப்பு இது. ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு. இது உற்பத்தியாளருக்குத் தனியுடைமையை மீண்டும ஏற்படுத்தித் தருவதன்று, முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்றதாகிய கூட்டு-வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லாருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவ தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமூகப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நிகழ்முறையாகும், வன்முறை மலிந்த, கடினமான நிகழ்முறையாகும், இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையப் பறிப்பதாகும்.”

(மூலதனம் முதல் தொகுதி -பக்கம்  1025-1027)

Friday, 18 December 2015

மூலதனம் நூலினுடைய முதல் தொகுதியின் பிரெஞ்சுப் பதிப்புக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரை (கடிதம்)

பிரஜை மோரிஸ் லஷாத்துக்கு.

அன்புடையீர்.

“மூலதனம்” மொழிபெயர்ப்பைத் தொடர் வெளியீடாகப் பிரசுரிப்பதென்ற தங்கள் கருத்தை மெச்சுகிறேன்.  இந்த வடிவத்தில் புத்தகம் தொழிலாளி வர்க்கத்துக்கு மேலும் எளிதாக கிடைக்கக் கூடியதாய் இருக்கும், இந்த நோக்கம் வேறு எதையும் விட எனக்கு முக்கியமானதாகும்.

தங்கள் ஆலோசனையின் நல்ல பக்கம் அது, ஆனால் நாணயத்தின் மறுபக்கம் இதோ: நான் கையாண்டுள்ள, இதுகாறும் பொருளாதார விவகாரங்களுக்குப் பிரயோகிக்கப்படாத பகுப்பாய்வு முறையினால் ஆரம்ப அத்தியாயங்கள் படிப்பதற்குக் கடினமாயுள்ளன. பிரெஞ்சுப் பொதுமக்கள் எப்போதுமே ஒரு முடிவுக்கு வர அவசரப்படக் கூடியவர்கள், பொதுவான கோட்பாடுகளுக்கும், தங்களது உணர்ச்சிகளைக் கிளறி விட்டுள்ள உடனடிப் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பை அறியத் துடிப்பவர்கள். ஆகவே தாங்கள் உடனே தொடர்ந்து படிக்க இயலவில்லை என்பதால் அவர்கள் ஆர்வமிழக்கலாம் என அஞ்ச வேண்டியுள்ளது.

உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டியே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல் சங்கடத்தை சமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை, அதன் களைப்பூட்டும் செங்குத்துப பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு.

அன்புடையீர்! தங்கள் நம்பிக்கைக்குரிய,

தங்கள் உண்மையுள்ள

காரல் மார்க்ஸ்

Monday, 5 October 2015

“தேசிய-கலாசார தன்னாட்சி” என்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் :-

(இந்த பதிவு பிரிதலுடன் கூடிய சுயநிர்ண உரிமையைக்கு எதிரானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.)

01:- (தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாப்பதற்கு போரடுகின்ற குட்டி முதலாளித்துவத் தேசியவாதத்தை முன்வைப்பவர்கள், தம்மை கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக் கொள்கின்றனர். உண்மையில் இது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கு எதிரான தேசியவாதமே என்கிறார் லெனின்.)

லெனின்:-
“சர்வதேசியவாதத்தை வார்த்தைகளில் அங்கீகரிப்பதும் ஆனால் செயலில், எல்லா விதமான பிரச்சாரம், கிளர்ச்சி, செய்முறை நடவடிக்கைகளிலும் அதற்குப் பதிலாகக் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதைப் பின்பற்றுவதும் இரண்டாவது அகிலத்தில் இருந்த கட்சிகளில் மட்டுமன்றி, அதை விட்டு வெளியேறி வந்த கட்சிகளிடமும் இருக்கின்றன, அதிலும் இப்பொழுது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற கட்சிகளிலும் கூட அதிகம் இருக்கின்றன.

இந்தத் தீமைக்கு எதிரான, மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டத்தின் அவசரத் தன்மை பாட்டாளி வர்க்கச் சர்வ்திகாரத்தை ஒரு தேசத்திலுள்ள சர்வாதிகாரம் என்பதில் இருந்து சர்வதேசச் சர்வாதிகாரமாக மாற்றுகின்ற கடமையின் அதிகரித்து வருகின்ற தேவையோடு இது மென்மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

குட்டி முதலாளித்துவத் தேசியவாதம், தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதையே சர்வதேசியவாதம் என்று பிரகடனம் செய்கிறது, அதற்கு மேல், அதில் ஒன்றுமில்லை. இந்த அங்கீகாரம் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே என்ற உண்மை ஒரு புறமிருக்கட்டும, குட்டி முதலாளித்துவத் தேசியவாதம் தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாக்கிறது. …”
(தேசிய, காலனியப் பிரச்சினைகளைப் பற்றி பூர்வாங்க நகல் ஆய்வுரைகள்)
(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக) 1920
பக்கம் 426

02:-

“சமூக-ஜனநாயகவாதிகள் எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்ககாரர்களையும் போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம்- “தேசியக் கலாச்சாரத்தை” அல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியத் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.
“தேசிய-கலாச்சார தன்னாட்சி” என்ற முழக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக் காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், பூர்ஷ்வாக்களின் அல்லது குட்டி பூர்ஷ்வாக்களின் “கலாச்சாரமே” மேலாதிக்கம் வகிக்கிறது”
(லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின் நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்- 1913) பக்கம் 82-83

03:- (சர்வதேசவாதம் பேசிக் கொண்டு ஆனால் ஒவ்வொரு தேசியத்தின் கலாசார தன்னாட்சியைப் பேசிகொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளருக்கு, கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு தனியான தேசிய இனப்பிரச்சினைகளுக்க பிரிதல் அவசியம் தான என்பதை ஆய்ந்தே முடிவெடுக்கின்றனர் என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)

லெனின்:-
“சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிதல் அவசியமானதுதான என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமாகும்.

இதற்க மாறாக, சமூக-ஜனநாயகம் முதலாவதாகவும் மிகவும் அதிகமாகவும் சோஷலிசத்துக்காகப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்துக்காக, முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகள் மற்றும் எல்லா தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஒன்று சேர்ந்து பல்வே தேசிய இனங்க்ளின் பாட்டாளி வர்க்கத்தினரை ஒடுக்குவதையும் ஜனநாயகத்தின் பொதுவான கடமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்.”

(தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26) பக்கம்89

04:- (முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலம் மென்மேலும் அதிகமாக சர்வதேசத் தன்மைப் பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் “தேசியக் கலாச்சாரம்”  என்ற முழக்கம் தவறானதாகும். ஏற்கெனவே தோன்றிவிட்ட பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கலாச்சாரம் எந்த தனித்த தேசியக் கலாச்சாரத்தை உட்கொள்வதில்லை, அதில் காணப்படும் முரணில்லா ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளையே ஏற்றுக் கொள்கிறது.)

லெனின்:-
“சமூக-ஜனநாயகவாதத்தின் நிலையில் இருந்து தேசியக் கலாச்சாரம் என்ற கோஷத்தை – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ- வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாதது. ஏற்கெனவே முதலாளித்துவத்தின் கீழ் மனித குலத்தின் எல்லா பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை மென்மேலும் அதிமாக சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொண்டு வருவதால் இந்தக் முழக்கம் தவறானதாகும். சோஷலிசம் அதை முற்றிலும் சர்வதேசியமயமாக்கிவிடும்.

எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரால் ஏற்கெனவே முறைப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டு வரும் சர்வதேசக் கலாச்சாரம் “தேசியக் கலாச்சாரத்தை” (எந்தத் தேசியக் குழுவினுடையதாக இருந்த போதிலும்) மொத்தமாக உட்கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தில் இருந்து அதிலிருக்கின்ற முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளை – மற்றவற்றை விலக்கி – ஏற்றுக் கொள்கிறது.”
(தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26) பக்கம் 92-93


05:- (குட்டி முதலாளித்துவ “தேசிய-கலாசார தன்னாட்சி” என்ற முழக்கம், முரணில்லாத ஜனநாகவாதப் போக்கைவிட பாட்டாளி வர்க்க்துக்கு தீங்குவிளைவிப்பவை என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)

லெனின்:-
“முரணில்லாத ஜனநாயகவாதம் என்ற முழக்கம் பாட்டாளி வர்க்கத்தினரையும் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள முற்போக்கு ஜனநாயகவாதிகளையும் (இவர்கள் தனிமைப்பட்டிருப்பதை வற்புறுத்துவதில்லை, கல்வி விவகாரங்கள் உட்பட எல்லாத் துளைகளிலும் தேசிய இனங்களில் உள்ள ஜனநாயகச் சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டுமென்று கோருகிறார்கள்) தனி மொத்தமாக ஒன்றுபடுத்துகின்றன, ஆனால் கலாச்சார-தேசிய தன்னாட்சி வெவ்வேறு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தையும் பிரிக்கிறது, தனித்தனியாக உள்ள தேசிய இனங்களின் பிற்போக்கு மற்றும் முதலாளித்துவ வர்க்கச் சக்திகளோடு சேர்க்கிறது.”
(தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26) பக்கம் 95-96

06:- (குறிப்பிட்ட அரசின் கீழ் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் இயக்கங்களும் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும். “தேசிய கலாச்சாரம்” என்ற முழக்கமானது, பூர்ஷ்வா தேசியவாதிகளது பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை மறைக்கும்)

லெனின்:-
“ஒரு குறிப்பிட்ட அரசியல் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற் சங்க, கூட்டுறவு, கல்வித் துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. பல்வேறு தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் இப்படி ஒரே நிறுவனங்களில் இணைப்பது மட்டுமே சர்வதேச மூலதனத்துக்கும் பிற்போக்கக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதை சாத்தியமாக்கும், “தேசிய கலாச்சாரம்” என்ற முழக்கத்தின் மூலம் தங்களுடைய பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை வழக்கமாக மறைத்துக் கொள்ளும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், பூர்ஷ்வா தேசியவாதிகளது பிரச்சாரத்தையும் நோக்கங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்.

உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் படைத்துக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நாளும் அதை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.”
(ரு.ச.ஜ.தொ. கட்சிகயின் மையக் கமிட்டி மற்றும்கட்சி ஊழியர்களின் 1913 கோடை காலக் கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து) பக்கம் 101-102

07:- (சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கவது என்ற அர்த்ததில் தேசியக் கலாச்சாரத்துக்கு விளக்கம் தருவது அகநிலைவாதமே. இவர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில் என்கிறார் லெனின்)
லெனின்:-
“”தேசியக் கலாச்சாரம்” என்ற முழக்கத்தின் முக்கியத்துவம் அந்த முழக்கத்துக்கு “அதன் வாயிலாகச் சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்” “விளக்கம் தருவதாகக்” குறித்த சிற்றறிவாளி வாக்களிப்பதனாலோ நல்லெண்ணம் கொண்டிருப்பதனாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. இந்த முறையில் அதைப் பார்ப்பது குழந்தைத் தனமான அகநிலை வாதம்.
பாட்டாளி வர்க்கத்துக்குப் பணி புரிய வேண்டுமென்று முயலுபவர்கள் எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், புர்ஷ்வாத் தேசியவாதத்தை – “சொந்த”, வேற்று, இரு வகை புர்ஷ்வாத் தேசிவாதத்தையும்- நிலைதளராமல், வழிவழுவாமல் எதிர்த்துப் போராட வேண்டும். தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கத்தை ஆதரிப்வர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில், மார்க்சிவாதிகள் மத்தியில் அல்ல.”
(தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்) 113-114

08:- “திண்ணமான ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், தேசிய, மகா ருஷ்யக் கலாச்சாரத்தின் முழக்கத்தை மகா ருஷ்ய மார்க்சியவாதி ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. அவர் ஏற்க முடியாது. அதை ஏற்றுக் கொள்பவர் யாரும் தேசியவாதிகளின் அணியில் போய் சேர வேண்டும். மார்க்சியவாதிகளின்அணியில் அல்ல.

நம்முடைய பணி இன்றைக்கு ஆதிக்கத்திலுள்ள கறுப்பு நூற்றுவர்களைச் சேர்ந்த, பூர்ஷ்வாக்களது மகா ருஷ்ய தேசியக் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடுதல், சர்வதேசிய உணர்வோடும் இதர நாடுகளின் தொழிலாளர்களுடன் நெருக்கமாக இணைந்தும் நின்று, நமது ஜனநாயக, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் மூலத்துவக்கமாகக் காணப்பட்டு நிற்கும் முளைகளையும் பேணி வளர்க்க வேண்டும்.”
(தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்) 114-115
09:-லெனின்:-
“தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கையே அதே நேரத்தில் அது மக்களுடைய மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்க முயல்கின்ற கொள்கையாகும்.
..
..ஆனால் தொழிலாளி வர்க்கத்துக்கு வேற்றுமை அல்ல- ஒற்றுமையே வேண்டும் அறிவுபெறாத மக்களிடம் அதன் எதிரிகள் ஏற்படுத்துகின்ற காட்டு மிரண்டித்தனமான தப்பெண்ணங்களையும்  மூடநம்பிக்கைகைளையும் காட்டிலும் பெரிய எதிரி அதற்கு வேறு இல்லை.”
(தேசிய சமத்துவம்) பக்கம்121
10:- லெனின்:-
“… “கலாச்சார-தேசிய சுயாட்சி” என்று சொல்லப்படுவதை, அதாவது கல்வி பற்றிய விவகாரங்களை அரசிடமிருந்து எடுத்து சம்பந்தப்பட்ட அந்தந்த தேசிய இனங்களுக்கு மாற்றிவிட வேண்டும் என்பதை மார்க்சிவாதிகள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். “தேசியக் கலாச்சாரத்தைப்” பற்றிய பிரச்சினைகளில் ஒரு குறிப்பிட்ட அரசுக் கூட்டாட்சியில் உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்ப தேசியச் சங்களில் கல்வி விவகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும, அதற்கென்று தனியே டையெட், கல்வி நிதி வரை செலவுத் திட்டம், பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்கள். கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் பொருளாகும்.

இது தொழிலாளி வர்க்கத்தைக் கெடுத்துப் பிரித்து வைக்கும் நாகரிகமான தேசியவாதத்தின் திட்டமாகும். இந்தத் திட்டதுக்கு எதிராக மார்க்சியவாதிகள் தேசங்கள், மொழிகளின் முழுமையான சமத்துவக் கொள்கையை முன்வைக்கிறார்கள், அவர்கள் அதிகார பூர்வமான ஆட்சி மொழியின் அவசியத்தை மறுக்கின்ற அளவுக்குக் கூடப் போகிறார்கள், அதே சமயத்தில் அவர்கள் தேசங்களுக்கு இடையே சாத்தியமான அளவுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளையும், எல்லா தேசங்களுக்கும் ஒரே மாதிரியான அரசு அமைப்புகளையும், ஒரே மாதிரியான பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்களையும், ஒரே மாதிரியான கல்விக் கொள்கையையும், ஒவ்வொரு தேசிய பூர்ஷ்வாக்களின் தேசியவாதத்துக்கு- அப்பாவிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு “தேசிய கலாச்சாரம்” என்ற முழக்கத்தின் வடிவத்தில் முன்வைக்கப்படும் தேசியவாதத்துக்கு- எதிரான போராட்டத்தில் வெவ்வேறு தேசங்களின் தொழிலார்களின் ஒறுமையையும் ஆதரிக்கிறார்கள்.”
(நாகரிகமான தேசியவாதத்தின் மூலம் தொழிலாளர்களைக் கெடுத்தல்-1914) பக்கம் 125-126

11:- லெனின்:-
“எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாகய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம், நகர்ப்புற நடுத்தர மக்களது குறிக்கோளான கூட்டாட்சி உறவுகளை எதிர்க்கிறோம்.”
மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து
பக்கம் 157

12:-
(எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல என்று சொல்லும் லெனின், ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்கும் கம்யூனிஸ்டுகள் எதை வற்புறுத்த வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்துகிறார். இதுவே முரணற்ற சர்வதேசியவாதமாகும். இந்த முயற்சி தோல்வி அடையும் நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசத்திற்கான பிரிதலுக்கு முழுமையான ஆதரவைத் தரும். அதுவே கம்யுனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையாகும்.)

லெனின்:-
“இந்தப் பிரச்சினையைச் சரியாக ஆராயாதவர்கள், ஒடுக்குகின்ற தேசங்களைச்  சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் “பிரிந்து போவதற்குரிய சுதந்திரத்தை” வற்புறுத்துவதும், ஒடுக்கப்படும் தேசங்களைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் “இணைவதற்குரிய சுதந்திரத்தை” வற்புறுத்துவதும் “முரண்பாடானது” என்று நினைக்கிறார்கள். எனினும் சர்வதேசியவாதத்துக்கும் தேசங்களின் இணைப்புக்கும் வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் இன்றைய நிலையில் இந்தக் குறிக்கோளை அடைவதற்கு வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் வேறு எந்தப் பாதையும் இருக்க முடியாது என்பதையும் சிறிது சிந்திதாலும் தெரிந்து கொள்ள முடியும்”
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தைத் தொகுத்துதைத்தல்
பக்கம் 228

12:- லெனின்:-
“நாம் அதிகாரத்துக்கு வரும் பொழுது, பின்லாந்துக்கும் உக்ரேனுக்கும் அர்மீனியாவுக்கும் ஜாதிசத்தாலும (மகாருஷ்ய பூர்ஷ்வாக்களாலும்) ஒடுக்கப்பட்ட வேறு எந்தத் தேசிய இனத்துக்கும் இந்த உரிமையை உடனடியாகவும் நிவந்தனை இல்லாமலும் அங்கீகரிப்போம். மறு பக்கத்தில் நாம் பிரிவினையைச் சிறிதும் ஆதரிக்கவில்லை.

சாத்தியமான அளவுக்குப் பெரிய அரசை, மகா ருஷ்யர்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்ற தேசிய இனங்களின் மிக அதிகமான எண்ணிக்கையினரின் இயன்ற அளவுக்கு மிக நெருக்கமான கூட்டணியை நாம் விரும்புகிறோம், ஜனநாயகம், சோஷலிசத்தின் நலன்களுக்காக, வெவ்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களில் சாத்தியமான அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையினரைப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குள் ஈப்பதற்காக நாம் இதைத விருமபுகிறோம். நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரமான ஒற்றுமையை, இணைப்பை விருமபுகிறோமே தவி பிரிவனையை அல்ல.”
(கட்சியின் வேலைத்திட்டத்தைத் திருத்தல் குறித்து)

பக்கம்281

Tuesday, 21 July 2015

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரைகள்

(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு- வெளிவந்து 150 ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன. இன்றும் இந்த ஆவணம் பயன்படுமா? என்ற கேள்விக்கு, மார்க்சும் எங்கெல்சும் அறிக்கையின் முன்னுரையில் ”அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை.”(1872) கூறியிருப்பதை முன்வைத்து, எதிர்மறையான பதிலைத் தருகின்றனர். அறிக்கை ஆவணமாகிவிட்டது, மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும் என்ற கருத்தை மார்க்சும் எங்கெல்சும் கூறினர் என்பது உண்மையே, அவ்வாறு கூறுவதற்கு முன்பு கூறியதையும் பார்க்க வேண்டும். “இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம்.” ஆக, பொதுக்கோட்பாடுகள் சரியானது என்று விவரங்களைச் செம்மை செய்யலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த செம்மைப்படுத்துதலை ஆவணத்திற்குள் செய்யாமல், முன்னுரையில் செய்ய வேண்டும் என்று கருத்துரைத்துள்ளனர்.

இன்றும் நாம் அறிக்கையை வளர்ச்சியடைந்த நிலைமைகளின் விவரங்களுக்கு ஏற்ப முன்னுரையுடன் வெளியிட வேண்டும். “அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன.” (1883)
அறிக்கையின் முதலாளிகளும் பாட்டாளிகளும் என்ற முதல் அத்தியாயத்தில், முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்முரண்பாட்டால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியைப் பற்றி விவரிக்கிறது. மீண்டும் மீண்டும் இன்றளவும் தோன்றும் பொருளாதார நெருக்கடி மார்க்சியத்தின் அடிப்படைகள் இன்றும்  மெய்யானது என்பதை நிரூபிக்கின்றன. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்ற இரண்டாம் அத்தியாயம், பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான நெருக்கத்தையும் இணக்கத்தையும் வலியுறுத்துகிறது.)

(அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகப் படிக்க பல்வேறு மொழிப் பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள்)

1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை  - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League)[1] அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பம் இட்டுள்ளோரைப் [மார்க்ஸ், ஏங்கெல்ஸைக் குறிக்கிறது] பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. இதன் கையெழுத்துப் பிரதி, அச்சிடப்படுவதற்காக, பிப்ரவரி புரட்சிக்கு[2] ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டனுக்குப் பயணித்தது. முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது.
...
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்[6] சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அத்தோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே.
..
அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது."

1882-ஆம் ஆண்டின் ருஷ்யப் பதிப்புக்கு எழுதிய முகவுரை - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது. அறுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலகல் (Kolokol)[8] இதழின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலை நாட்டினரால் அப்போது அதில் (அறிக்கையின் அந்த ருஷ்யப் பதிப்பில்) ஓர் இலக்கிய ஆர்வத்தை மட்டுமே காண முடிந்தது. அத்தகைய ஒரு கண்ணோட்டம் இன்று சாத்தியமற்றது.

அறிக்கையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்பாகக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை எடுத்துக்கூறும் கடைசிப் பிரிவு, அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) பாட்டாளி வர்க்க இயக்கம் இன்னும்கூட எவ்வளவு குறுகிய களத்தினில் செயல்படுவதாக இருந்தது என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக ருஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை பற்றிய தகவல்கள் இப்பிரிவில் விடுபட்டுள்ளன.
...
வெகுவிரைவில் நிகழவிருக்கும், நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ருஷ்யாவில், அதிவேகமாக வளர்ந்துவரும் முதலாளித்துவச் சுரண்டல், இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ள முதலாளித்துவ நிலவுடைமை ஆகியவற்றுடன்கூடவே, பாதிக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகளின் பொது உடைமையாக இருப்பதை நாம் காண்கிறோம். இப்போதுள்ள கேள்வி இதுதான்: ருஷ்ய ஒப்ஷீனா (obshchina) [கிராமச் சமூகம்] அமைப்புமுறை வெகுவாகச் சிதைவுற்றிருப்பினும், புராதன நிலப் பொது உடைமையின் ஒரு வடிவமான இது, நேரடியாகக் கம்யூனிசப் பொது உடைமை என்னும் உயர்ந்த வடிவத்துக்கு வளர்ச்சியுறுமா? அல்லது அதற்கு மாறாக, மேற்கு நாடுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியாக அமைந்த, அதே சிதைந்தழியும் நிகழ்ச்சிப்போக்கை முதலில் அது கடந்து தீரவேண்டுமா?

இதற்கு, இன்றைக்குச் சாத்தியமாக இருக்கும் ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடி ஆகி, இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நிற்குமாயின், நிலத்தின் மீதான தற்போதைய ருஷ்யப் பொது உடைமை, கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படக்கூடும்."

1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை - ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

"அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:

அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.

நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்."

1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரை – ஏங்கெல்ஸ்

"தொழிலாளர்களுடைய சங்கமான “கம்யூனிஸ்டுக் கழகத்தின்” (Communist League) வேலைத்திட்டமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்காகவே இருந்த கம்யூனிஸ்டுக் கழகம் பின்னாளில் சர்வதேச அமைப்பாக ஆயிற்று. 1848-க்கு முன்பு [ஐரோப்பா] கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளின் காரணமாக, இக்கழகம் தவிர்க்க முடியாதவாறு ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. வெளியிடுவதற்கென ஒரு முழுமையான, கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த கட்சி வேலைத்திட்டத்தைத் தயாரித்து அளிக்கும்படி, 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கழக மாநாட்டில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பணிக்கப்பட்டனர்.
...
ஆளும் வர்க்கங்கள் மீது மற்றுமொரு தாக்குதலுக்குப் போதுமான பலத்தை ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் மீண்டும் பெற்றபோது, சர்வதேசத் தொழிலாளர் சங்கம் [அகிலம்] உதித்தெழுந்தது. ஆனால், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் மிக்க பாட்டாளி வர்க்கம் முழுவதையும் ஒரே அமைப்பாக ஒன்றிணைக்க வேண்டுமென்ற வெளிப்படையான குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இச்சங்கத்தால், அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாகப் பிரகடனப்படுத்த இயலவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும், ஃபிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரூதோன் (Proudhon)[12] ஆதரவாளர்களும், ஜெர்மன் நாட்டு லஸ்ஸாலியர்களும் (Lassalleans)[ஏ2] ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பரந்த வேலைத்திட்டம் ஒன்றையே அகிலமானது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அனைத்துத் தரப்பினரும் மனநிறைவுகொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை வரைந்து கொடுத்த மார்க்ஸ், தொழிலாளி வர்க்கத்தின் அறிவுநுட்ப வளர்ச்சியில் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். அத்தகு வளர்ச்சி, ஒன்றிணைந்த செயல்பாடு, பரஸ்பரக் கலந்துரையாடல் ஆகியவற்றின் நிச்சயமான விளைவாகும். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நேரடி நிகழ்வுகளும், சாதக பாதகச் சூழ்நிலைகளும், வெற்றிகளையும்விட அதிகமாகத் தோல்விகளும், மனிதர்களின் அபிமானத்துக்குரிய பல்வேறு சாகச உத்திகள் போதுமானவை அல்ல என்பதை அவர்களின் மனதில் உறைக்கும்படி தெளிவாக உணர்த்தும். அவை தொழிலாளி வர்க்க விடுதலைக்குரிய மெய்யான நிலைமைகள் குறித்து, மேலும் முழுமையான உள்ளார்ந்த புரிதலுக்கு வழிகோலவே செய்யும் என மார்க்ஸ் கருதினார். மார்க்ஸின் எண்ணம் சரியாகவே இருந்தது. அகிலமானது 1874-இல் கலைக்கப்பட்டபோது, அது [தொடங்கப்பட்ட ஆண்டான] 1864-இல் கண்ட தொழிலாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொழிலாளிகளையே விட்டுச் சென்றது.
..
... அறிக்கையின் வரலாறு, நவீனத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது அறிக்கையானது, ஐயத்துக்கு இடமின்றி சோஷலிச இலக்கியங்கள் அனைத்தினுள்ளும் மிகப்பரந்த அளவில் செல்வாக்குப் பெற்ற, மிகவும் சர்வதேசத் தன்மை கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. சைபீரியாவிலிருந்து கலிஃபோர்னியாவரை கோடானு கோடி உழைக்கும் மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது.

அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.

என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்."

1890-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"...அறிக்கை வெளியானபோது, அதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் இரண்டு வகையினர் சோஷலிஸ்டுகள் எனக் கருதப்பட்டனர். ஒருபுறம் பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளின் ஆதரவாளர்கள் இருந்தனர். குறிப்பாக, இங்கிலாந்தில் ஓவனியர்கள், ஃபிரான்சில் ஃபூரியேயர்கள். இவ்விரு வகையினரும் அக்காலத்திலேயே குறுங்குழுக்கள் நிலைக்குச் சுருங்கிப் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள் இருந்தனர். மூலதனத்துக்கும் லாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி, இவர்கள் தமது சகல நோய்நீக்கும் சஞ்சீவிகள் மூலமும் அனைத்துவகை சில்லறை ஒட்டு வேலைகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினர். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள். 'படித்த' வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடியவர்கள். என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி சமுதாய அமைப்பைத் தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரியது. வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதை அது தீர்க்கமாக உணர்ந்திருந்தது. இப்பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட, பல வேளைகளில் பெரும்பாலும் பக்குவமற்ற ஒரு கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது, ஃபிரான்சில் காபேயின் 'ஐகேரியக்' கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் கம்யூனிசம் ஆகிய இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைப்புகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக விளங்கியது. 1847-இல் சோஷலிசம் என்பது முதலாளித்துவ வர்க்க இயக்கத்தையும் [வேறொரு முகவுரையில் நடுத்தர வர்க்க இயக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்], கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாக இருந்தன. சோஷலிசமானது, குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் மிகவும் மரியாதைக்கு உரியதாக விளங்கியது, ஆனால் கம்யூனிசமோ அதற்கு நேர்மாறானதாக இருந்தது. நாங்கள் மிகத் தொடக்க காலம்தொட்டே, 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் செயல்பாட்டால்தான் பெறப்பட்டாக வேண்டும்'[21] என்ற தீர்மானகரமான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தோம். எனவே, [சோஷலிசம், கம்யூனிசம் என்கிற] இரண்டு பெயர்களுள் எதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அன்றைக்கு எங்களிடம் எவ்விதத் தயக்கமும் இருந்திருக்க முடியாது. அன்றுமுதல் இன்றுவரை அப்பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

”உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” [அடிக்குறிப்பு எண் 52 காண்க] நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் திரண்டெழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில், நாங்கள் இந்த முழக்கத்தை உலகத்துக்குப் பிரகடனம் செய்தபோது, மிகச்சில ஆதரவுக் குரல்களே எழுந்தன. என்றாலும், 1864 செப்டம்பர் 28-இல் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி மக்கள், பெருமைமிக்க நினைவுக்குரிய சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் [முதலாவது அகிலம்] கைகோத்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்பது உண்மைதான். ஆனால் அது உருவாக்கிய, அனைத்து நாட்டுப் பாட்டாளிகளின் அழிவில்லா ஐக்கியமானது இன்னும் நிலைத்து நிற்கிறது, எப்போதையும்விட வலிமைமிக்கதாக வாழ்கிறது என்பதற்கு இன்றைய நாளைவிட வேறு சிறந்த சாட்சி ஏதுமில்லை. காரணம், இந்த வரிகளை நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம்[22], ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது போரிடும் சக்திகளை மேலாய்வு செய்து வருகின்றது. இந்தப் போராட்ட சக்திகள் முதன்முதலாகத் திரட்டப்பட்டுள்ளன. அதுவும் ஒரே படையணியாக, ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்பட்டுள்ளன. 1866-இல் அகிலத்தின் ஜெனீவா மாநாட்டிலும், மீண்டும் 1889-இல் பாரிஸ் தொழிலாளர் மாநாட்டிலும் பிரகடனப்படுத்தியதைப்போல், ஒரே மாதிரியான எட்டு மணிநேர வேலைநாள் என்பதை முறையாகச் சட்டம் இயற்றி நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள் ஆகும். இன்றைய இந்தக் காட்சி, அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் இன்றைக்கு மெய்யாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்கிற உண்மையை, அனைத்து நாடுகளின் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் காணும் வண்ணம் அவர்களின் கண்களைத் திறக்கும்."

1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை- ஏங்கெல்ஸ்

"அனைத்துக்கும் முதலாவதாக, அண்மைக் காலமாகவே, அறிக்கையானது ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு சுட்டுகைபோல (index) ஆகியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அந்நாட்டுத் தொழிலாளர்களிடையே, உடைமை வர்க்கங்கள் தொடர்பாகத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அவர்களின் நிலைபாடு குறித்துத் தெளிவுபெற வேண்டிய தேவையும் வளர்கின்றது. சோஷலிச இயக்கம் அவர்களிடையே பரவுகின்றது. அறிக்கைக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையினுடைய பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை மட்டுமன்றிப் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சி நிலையைக்கூடப் பெருமளவு துல்லியமாக அளவிட்டுவிட முடியும்."

1893-ஆம் ஆண்டின் இத்தாலியப் பதிப்புக்கு எழுதிய முகவுரை
இத்தாலிய வாசகருக்கு- ஏங்கெல்ஸ்


" 1848-ஆம் ஆண்டுப் புரட்சி, சோஷலிசப் புரட்சியாக இருக்கவில்லை. என்றாலும், அது சோஷலிசப் புரட்சிக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது; அதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்தது. அனைத்து நாடுகளிலும் பெருவீதத் தொழில்துறைக்கு ஊக்கம் அளித்ததன் மூலம், முதலாளித்துவ ஆட்சியமைப்பு, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில், எண்ணிறந்த, ஒன்றுதிரண்டுள்ள, சக்திமிக்க பாட்டாளி வர்க்கத்தை எங்கெங்கும் தோற்றுவித்துள்ளது. இவ்வாறாக, முதலாளித்துவ வர்க்கம், அறிக்கையின் மொழியில் சொல்வதெனில், தனக்குச் சவக்குழி தோண்டுவோரைத் தானே வளர்த்தெடுத்துள்ளது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும், பொதுவான லட்சியங்களை நோக்கிய, இந்தத் தேசங்களின் சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பையும் வென்றெடுப்பது சாத்தியமாக இருக்காது."

Sunday, 19 July 2015

குறுங்குழு அராஜகவாதியின் வன்முறையான புரட்சியை எதிர்த்து- எங்கெல்ஸ்

(தேர்தலில் வாக்களிப்பது கூட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானதாக குறுங்குழுவாதம் கருதுகிறது. வன்முறையான புரட்சியைத் தவிர வேறு எதையும் தொழிலாளர்களின் நடவடிக்கையாக இவை ஏற்றுக் கொள்வதில்லை. இவைகளால் ஏற்படுத்திய சிறுபிள்ளைத் தனமான “சமூகப் புரட்சி”க் கலகம் போலீசாரால் முறியடிக்கப்பட்டது. இவைகள் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நடவடிக்கைக்குரிய எத்தகைய களத்தையும் இல்லாமற்செய்து விட்டது. சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச் சீர்குலைத்தது தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும் என்கிறார் எங்கெல்ஸ்)

“சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாற்றைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கும் நமது வாசகர்கள், பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த உடனே அந்த மாபெரும் சங்கத்தில் வேற்றுமைகள் ஏற்பட்டன, 1872ல் நடைபெற்ற ‘ஹேக் காங்கிரசில் பகிரங்கமான பிளவுக்கும் அதன் காரணமாகச் சிதறலுக்கும் அவை இட்டுச் சென்றன என்பதை நினைவுப்படுத்திக் கொள்ள முடியும். ருஷ்யரான பக்கூனினும்  அவருடைய ஆதரவாளர்களும் தாங்கள் மிகவும் குறுகிய சிறுபான்மையினராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமையை – நியாயமான வழிகளினாலோ அல்லது கீழ்த் தரமான முறைகளினாலோ- கைப்பற்றச் செய்த மோசடிகளே இந்த வேற்றுமைக்குக் காரணமாக இருந்தன.

தொழிலாளி வர்க்கத்தின் எல்லா அரசியல் நடவடிக்கையையும் கொள்கை அளவில் எதிர்ப்பதே அவர்களுடைய முக்கியமான போக்கு, ஆகவே ஒரு தேர்தலில் வாக்களிப்பது கூட அவர்களுடைய பார்வையில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட துரோக நடவடிக்கையாகும். வன்முறையான புரட்சியைத் தவிர வேறு எதையும் அவர்கள் நடவடிக்கைச் சாதனமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
..
இத்தாலியில் “சமூகப் புரட்சிகாகச்” செய்யப்பட்ட சிறுபிள்ளைத் தனமான முயற்சிக்குப் பிறகு -அதில் “அராஜகவாதிகளின்” அறிவோ அல்லது துணிவோ மெச்சக் கூடிய விதத்தில் வெளிப்படவில்லை- உண்மையான தொழிலாளி வர்க்கச் சக்தி அதிகமான அளவில் அறிவுக்குப் பொருந்திய நடவடிக் முறைகளைத் தேடத் துவங்கியது. பெல்ஜியத்தில் தலைவர்கள் பின்பற்றிய தலையிடாமைக் கொள்கையின் விளைவாக- அந்தக் கொள்கை தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான நடிவடிக்கைக்குரிய எத்தகைய களத்தையும் இல்லாமற்செய்து விட்டிருந்தது- இயக்கம் ஸ்தம்பித்து நின்றது.
..
இத்தாலியின் தலையிடாமைக் கொள்மையைப் பின்பற்றியவர்களில் எஞ்சியிருந்தவர்கள் மனமுறிவுக்கு உந்தப்பட்டவர்களாக நேபிள்சுக்குப் பக்கத்தில் மற்றொரு கலகத்தை முயற்சி செய்தார்கள். முப்பது அராஜகவாதிகள் “சமூகப் புரட்சியைப்” பிரகடனம் செய்தார்கள், ஆனால் போலீஸ்காரர்கள அவர்களைச் சீக்கிரமாக கவனித்துக் கொண்டார்கள். இத்தாலியில் தங்களுடைய சொந்த குறுங்குழுவாத இயக்கத்தை முழுமையாகச் சீர்குலைத்தது தான் அவர்களுடைய பெரும் சாதனையாகும்.”
(1877ல் ஐரோப்பாவின் தொழிலார்கள்)

(அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் – பக்கம் 231-233)