(முதலாளித்துவ
ஜனநாயத்தில் உள்ள நாடாளுமன்றம், தொழிற்சங்கங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது பற்றி
மாவோ)
மாவோ:-
"ஆயுத
பலத்தினால் அதிகாரத்தை கைப்பற்றுவதும் போரின் வாயிலாக சிக்கலை தீர்ப்பதும் மையக் கடமையும்
புரட்சியின் மிக உயர்ந்த வடிவமுமே ஆகும். புரட்சி குறித்த இந்த மார்க்சிய - லெனினியக்
கொள்கைநெறி (Principle) சீனாவிற்கும் பிற அனைத்து நாடுகளுக்குமாக உலகிற்கே பொருந்துவதாக
விளங்குகிறது.
ஆனால்,
கொள்கைநெறி ஒன்றாக இருக்கையில், பாட்டாளி வர்க்க கட்சியால் அதனை செயற்படுத்துவது என்பது
மாறுபடும் நிலைமைகளுக்கு ஏற்ப, மாறுபடும் வழிகளில் வெளிப்படுத்துகிறது. முதலாளிய நாடுகள்,
உள்நாட்டில், அவை பாஸிஸ்டாக இல்லாத பொழுதோ, போரில் இல்லாத பொழுதோ முதலாளிய ஜனநாயகத்தை
(நிலவுடைமை அல்ல) செயற்படுத்துகின்றன; அவை தமது வெளி உறவுகளில், அவை ஒடுக்கப்படுவதில்லை.
ஆனால், பிற தேசங்களை ஒடுக்குகின்றன.
இச்சிறப்புத் தன்மைகளினால்
(Characteris- tics) முதலாளிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சியின் கடமையானது
என்னவெனில் நீண்ட காலப்பகுதியிலான சட்டரீதியான போராட்டத்தின் ஊடே தொழிலாளர்களுக்கு
கல்வி புகட்டுவதும் பலத்தை கட்டியமைப்பதும் அதன் வாயிலாக முதலாளியத்தை இறுதியாக தூக்கியெறிவதற்கு
தயாராவதும் ஆகும்.
இந்நாடுகளில், சிக்கல் என்னவெனில், நாடாளுமன்றத்தை மேடையாக பயன் படுத்துதல், பொருளாதார அரசியல் வேலைநிறுத்தங்கள், தொழிற் சங்கங்களை அமைப்பாக்கி தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டுதல் என்ற நீண்ட சட்டரீதியான போராட்டமே ஆகும். அங்கே அமைப்பு வடிவம் என்னவெனில் சட்டரீதியானதுடன் போராட்ட வடிவமும் குருதியற்றதும் (இராணுவம் சாராத) ஆகும்."
(போர் மற்றும் மூலஉத்தி குறித்த சிக்கல்கள்
நவம்பர் 6, 1938, மாவோ- தொகுதி 2)
No comments:
Post a Comment