Friday 4 August 2017

வாக்குரிமையும் ஆயுதமேந்திய புரட்சியும் பற்றி எங்கெல்ஸ்:-

பாவுல் லபார்க்குக்கு பி.எங்கெல்ஸ் எழுதிய ஒரு கடிதத்திலிருந்து

லண்டன், நவம்பர் 12, 1892

“......எல்லோருக்கும் வாக்குரிமை என்கிற எவ்வளவு நேர்த்தியான ஆயுதம் பிரான்சைச் சேர்ந்த உங்களிடம் நாற்பது ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்று மட்டும் மக்களுக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

புரட்சிக்கு விடுவிற அறைகூவலை விட அது மெதுவானது, சலிப்பூட்டுவது என்றாலும் அது பத்து மடங்கு உறுதியானது, அதை விட நல்ல விஷயம் என்னவென்றால், ஆயுதமேந்திய புரட்சிக்கு அறைகூவல் விடவேண்டிய நாளை மிகவும் சரி நுட்பமாக அது சுட்டிக் காட்டுகிறது, எல்லோருக்கும் வாக்குரிமை என்பதைத் தொழிலாளிகள் அறிவோடு பயன் படுத்துவார்களேயானால் அது ஆட்சியாளர்களைச் சட்ட முறையில் தூக்கியெறிவதில் தள்ளிவிடும், அதாவது புரட்சி செய்வதற்கு நமக்கு மிகவும் சாதகமான நிலைமையை செய்து கொடுப்பதில் தள்ளிவிடும் என்பது அநேகமாக நிச்சயம்.”


கடிதத் தொகுப்பு, தொகுதி 3, பக்கம் 211

No comments:

Post a Comment