Wednesday, 31 December 2025

முதலாளித்துவத்தை தூக்கி எறிவது பற்றியும் சோஷலிசப் புரட்சியை நடத்துவது பற்றியும் ஸ்டாலின்

 “எந்த தீர்மானகரமான சாதனத்தைக் கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவக் கட்டைமைவைத் தூக்கியெறியும்? 

சோசலிசப் புரட்சிதான் இந்த வழிமுறைச் சாதனமாக இருக்கும். 

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்ற வடிவங்கள் அனைத்துமே, பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவதற்கும் அமைப் பாக்குவதற்குமான நல்ல சாதனங்கள்தான். ஆனால், இவற்றுள் எந்த ஒரு சாதனமும் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் ஆற்றல் உடையது அல்ல, இந்தச் சாதனங்கள் அனைத்தும் தலையாயதும் தீர்மானக ரமானதுமான ஒரே வழிமுறைச் சாதனத்தில் கட்டாயமாக ஒன்று குவிக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி, அதன் அடித்தளத்தையே தகர்க்கும்படியான, தீர்மானகரமான தாக்குதலை தொடுப்பதற்காக பாட்டாளி வர்க்கம் ஆவேசத்துடன் தவறாமல் எழுந் தாக வேண்டும். இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான, வழி முறைச் சாதனமே சோசலிசப் புரட்சியாகும். 

சோசலிசப் புரட்சியை, திடுதிப்பென்றும், ஒரே அடியில் முடிந்து விடுவதுமான ஒன்றாக எண்ணவே கூடாது; அது ஒரு நீண்டகாலப் போராட்டமாகும்; அப்போராட்டம் பரந்துபட்ட பாட்டாளி மக்களால் தொடுக்கப்படுவதாகும்; முதலாளித்துவத்தை தோல்வியுறச் செய்து அதன் ஆதிக்க நிலைகளைக் கைப்பற்றுவதற்காக, போராட்டம் தொடுக் கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி என்பது, அதே நேரத் தில், தோற்கடிக்கப்பட்ட முதலாளிகளின் மீதான ஆதிக்கம் என்று பொருள்படுவதால்; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலில்,  ஒரு வர்க்கத்தின் தோல்வியானது பிறிதொரு வர்க்கத்தின் ஆதிக்கமாகவே அமையும் என்பதால்; சோசலிசப் புரட்சியின் முதல் கட்டமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமாக இருந்தே தீரும். 

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத் தால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவது — இத்துடன்தான் சோச லிசப் புரட்சி கட்டாயம் துவக்கப்பட வேண்டும். 

இதன் பொருள் என்ன? முதலாளித்துவ வர்க்கம் முற்றாகத் தோற் கடிக்கப்படும் வரையில், அதனுடைய செல்வம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் வரையில், தவறாமல் ஒரு இராணுவத்தை பாட்டாளி வர்க்கம் தனக்கெனச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்; தனது சொந்த “பாட்டாளிகளின் படையை" தவறாமல் கொண்டிருக்க வேண்டும். இந்தப் படையின் உதவியைக் கொண்டுதான், மடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் எதிர்ப் புரட்சித் தாக்குதல்களை முறியடிக்க அதனால் முடியும்; பாரிஸ் கம்யூன் நாட்களில், பாரிசின் பாட்டாளி வர்க்கம் எதைச் செய்ததோ அதையேதான் மிகச்சரியாகச் செய்ய வேண்டியிருக்கும். 

சோசலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏன் தேவைப்படுகிறது? பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தைப் பறி முதல் செய்வதற்குத் தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவ வர்க்கம் முழுவதினிடமிருந்து நிலம், காடுகள், தொழிற் சாலைகள் மற்றும் ஆலைகள், இயந்திரங்கள், இரயில்வேக்கள் இன்னும் பிறவற்றைக் கைப்பற்றுவதற்குத் தேவைப்படுகிறது. 

பறிமுதலாளர்களான முதலாளிகளைப் பறிமுதல் செய்வது இதற்குத்தான் சோசலிசப் புரட்சி இட்டுச் செல்லும், இட்டுச் செல்ல வேண் டும். 

இந்தத் தலையாயதும் தீர்மானகரமானதுமான வழிமுறைச் சாதனத்தைக் கொண்டுதான், பாட்டாளி வர்க்கமானது, இப்போதைய முதலா வித்துவக் கட்டமைவைத் தூக்கியெறியும்.”

(அராஜகவாதமா? சோஷலிசமா? – பக்கம்- 66-67)